Last Updated : 22 Feb, 2017 01:36 PM

 

Published : 22 Feb 2017 01:36 PM
Last Updated : 22 Feb 2017 01:36 PM

விக்ரம் வேதா பர்ஸ்ட் லுக் வெளியீடு: கோடை விடுமுறைக்கு வெளியாகிறது

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய்சேதுபதி நடித்துள்ள 'விக்ரம் வேதா' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

'ஓரம் போ', 'வா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. இவர்கள் தற்போது 'விக்ரம் வேதா' படத்தை இயக்கி முடித்துள்ளார்கள். படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.

காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x