Published : 11 Jan 2017 06:33 PM
Last Updated : 11 Jan 2017 06:33 PM

சென்னை பட விழா | கேஸினோ, ஆர்சிசி | ஜன.12 | படக்குறிப்புகள்





சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.12) கேஸினோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »



காலை 10.00 மணி | LENA LOVE / LENA LOVE | FLORIAN GAAG | GERMANY | 2016 | 95'



லீனா. உணர்ச்சிகரமான, அதேசமயம் புதிய சிந்தனைகள் அதிகமிருக்கும் வளரிளம் பெண். தான் வசிக்கும் இடம் தன்னை விளிம்பு நிலைக்கு தள்ளுவதாக உணரும் அவள், திறமையான இளைஞன் டிம்மை விரும்புகிறாள். ஆனால் லீனாவின் தோழி நிகோல் அவனை தட்டிச்செல்கிறாள். மனமுடையும் லீனா தனது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் கொட்டுகிறாள். அங்கு அவளுக்கு நோவா என்பவன் நெருக்கமாக திடீரென ஒருநாள் லீனா மாயமாகிறாள். அவளைத் தேடும் படலத்தில் பல மர்மங்கள் விலகுகிறது.



*****



பகல் 12.00 மணி | AS I OPEN MY EYES / A PEINE | DIR: LEYIA BOUZID | TUNISIA | 2015 | 102'



துனிசியாவின் கோடைக் காலம் 2010. புரட்சிக்கு சில மாதங்கள் முன்பு. 18 வயதான ஃபாரா படித்து முடிக்கிறாள். அவள் குடும்பத்தினர் அவளை மருத்துவராக வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் அவளுக்கோ தனது இசைக்குழுவின் மீது ஈடுபாடு. அதில் ஒருவனுடன் காதல். வாழ்க்கையைக் கொண்டாடுவது, குடிப்பது, இரவில் நகரத்தை சுற்றுவது என வாழ்ந்து வருகிறாள் ஃபாரா. அவளது தாய் ஹயத்துக்கு துனிசியாவும், அதில் நிறைந்துள்ள ஆபத்துகளும் தெரியும். அடக்குமுறை நிறைந்த தன் சமூகத்தையும், குடும்பத்தையும் ஃபாரா எப்படி எதிர்த்தாள்?





*****



மாலை 2.30 மணி | SUMMERTIME | LA BELLE SAISON | DIR: CATHERINE CORSINI | FRANCE | 2015 | 120'



1971. டெல்ஃபைன் 23, ஒரு விவசாயியின் மகள், அவள் கிராமப்புறங்களையும் நிலங்களில் வேலை செய்வதையும் தனது தந்தையையும் மிகவும் நேசிக்கக் கூடியவள். ஆனால் அவள் பாரீஸ் நகரத்திற்கு வண்டி ஓட்டிச்செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அவள் கரோல், 35ஐ சந்திக்கிறாள். கரோல் என்பவளோ மானுவல் என்பவனுடன் வசிப்பவள். அதேநேரம் பெண்ணிய இயக்கங்களில் பங்கெடுத்துக் கொள்பவள். டெல்பைன் பார்த்த மாத்திரத்திலேயே கரோலின் காதலில் விழுகிறாள். அந்த நிமிடத்திலிருந்து கரோலின் வாழ்க்கை மாறிப்போகிறது.

*



சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.12) ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | CHARLOTTE: A ROYAL AT WAR | DIR: RAY TOSLEVIN | LUXEMBOURG | 2008 | 98'



1940களில் லக்சம்பர்க் நாடு நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது சார்லோட்டும் அவளது அமைச்சர்களும் நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது. அச்சிறிய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை சார்லோட் முன்னின்று நடத்தினார். தனது ஆக்கிரமிக்கப்பட்ட நாடு திரும்பவும் சுதந்திரம் பெற ஒரு முக்கிய ஊக்கியாகத் திகழ்ந்தவர் அவரிடம் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் நட்புகொண்டார். கைவிடப்பட்ட தனது மக்களைத் திரட்டவும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்கவும் வானொலி வழியாக முழங்கிய அவளது பேச்சு அவளை ஒரு பிரச்சார முத்து எனும் புகழை பெற்றுத் தந்தது. சார்லோட் எனும் பெண்ணின் இதுவரை அதிகம் சொல்லப்படாத கதை இப்போது திரையில்.



*****



காலை 11.30 மணி | METRO | DIR: ANANDA KRISHNAN | TAMIL | 2016 | 119'



ஓய்வு பெற்ற அப்பா, இல்லத்தரசி அம்மா, இரண்டு மகன்கள் எனக் கச்சிதமான நடுத்தரக் குடும்பம். பொறுப்புள்ள மூத்த மகனாக நாயகன் சிரிஷ். ஒன்றரை லட்சம் ரூபாய் மோட்டார் சைக்கிள், ஆப்பிள் ஐ போன் என ஆடம்பரமாக வாழப் பேராசைப்படும் இளைய மகனாக சத்யா. தனது ஆசைகளை அடைவதற்காக எதற்கும் துணிகிறார் சத்யா. அந்த துணிச்சல் அவரை சங்கிலிப் பறிப்புக் கும்பலிடம் அழைத்துச் செல்கிறது. அதன் பிறகு என்னென்ன நடக்கின்றன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்கிறது இயக்குநர் ஆனந்த கிருஷ்ணாவின் 'மெட்ரோ'.



*****

பிற்பகல் 2.00 | Mantra | English | 2015 | 90'



உலகமயமாக்கலை விமர்சனப் பூர்வமாக அணுகும் ஓர் இந்தியத் திரைப்படம். இந்தியா ஒளிர்கிறது என்று கூறப்பட்டதன் பின்னணிக்கு எதிரான நிலையை இப்படம் பேசுகிறது. மந்த்ரா தனது குடும்பக் கதையை கூறுகிறாள். அது மட்டுமின்றி அவள் உள்ளூர் சந்தையில் பன்னாட்டு வணிகம் நுழைவதை எதிர்த்து போராடுகிறாள். மாற்றத்துக்கான இந்தியா எனும்பொய்த்தோற்றத்தை எதிர்த்து இயங்கும் மையக் கதாபாத்திரத்தின் தனிப்பட்ட வாழ்க்கையையும் இப்படம் அலசுகிறது. கோவா திரைப்படவிழா திரையிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x