Published : 06 Jan 2017 04:14 PM
Last Updated : 06 Jan 2017 04:14 PM

சென்னை பட விழா | ஆர்கேவி | ஜன.7 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை (ஜன.7) ஆர்.கே.வி. ஸ்டூடியோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | FRAGMENTS OF LOVE | FRAGMENTOS DE AMOR | DIR: FEMANDO VALLEJO|PUERTO RICO | 2016 | 95'

ரோட்ரிகோ ஒரு பியானோ இசையமைப்பாளர் பாடலாசிரியர். அவர் மிகவும் சிரமமான வாழ்க்கையில் இருக்கும்போது சூசனா எனும் விரைவில் திருமணம் ஆக உள்ள இளம்பெண்ணின் காதலில் விழுகிறார். மெடலின் நகரத்திற்கு அருகே குண்டு வீசப்பட்டு கொல்லப்படும் சூழ்நிலையில் இருவரும் ஒருவர் அணைத்துக்கொள்கிறார்கள். அதிர்ச்சிமிக்க அந்த நகரத்தில் உள்ள அவளது சிறுகூடு போன்ற வீட்டுக்குள் பியானோ இசைக்கலைஞரை அழைத்துச் சென்று ஒவ்வொருநாளும் தனது பழைய ஆண் நண்பர்களின் கதைகளைச் சொல்கிறாள். அவளது கதைகளைக் கேட்ட அவர் திரும்பவும் பியானோயை இசைக்கத் தொடங்குகிறார். இருந்தாலும் ஒரு உறுத்தல் அவரை பொறாமை கொள்ளவும் சிலநேரங்களில் சித்த பிரமையடையவும் செய்கிறது. அவளின் உண்மைத் தன்மையின்மீது அன்புகொண்டிருக்கும் அவரிடமிருந்து கடைசியில் சூசனா விலக நேரிடுகிறது. தனது வருங்கால கணவனோடு செல்கிறாள்.

பகல் 12.00 மணி | LONELY | TANHA | DIR: BAHAREH SEDEGHIJAM | IRAN | 2016 | 96'

பிரச்சினையின் விளிம்பில் ஜோடி ஒன்று தங்கள் வயதையும் நிலையையும் உணர்ந்து ஒரு முக்கியமான முடிவை எடுக்கின்றனர். கருத்தரிப்புக்கான சிகிச்சையைப் பற்றிய அந்த முடிவு ஷாஹ்ர்ஸாத்துக்கும் அமிராலிக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்குகிறது. அவர்களுக்கிடையே உள்ள கட்டாய ரகசியம் பெரும்சோகத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

பிற்பகல் 2.30 மணி | ALL OF A SUDDEN | AUF EINMAL | DIR: ASLI OZGE | GERMANY, NETHERLANDS, FRANCE | 2016 | 112'

காஸ்டன் பிளாட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு அன்னாவைத் தவிர, எல்லோரும் வீடு திரும்பி விடுகின்றனர். காஸ்டன் அந்த இளம்பெண்ணின்மீது ஏதோ ஒரு மர்மமான ஈர்ப்பை உணர்கிறான். ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியாக ஒரு பலவீனமான தருணம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. ஜெர்மனியில் ஒரு சிறிய நகரத்தில் சிறப்பாக வசித்து வந்த கார்ஸ்டன் மெல்ல தனது கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்குகிறான். அவனது பதற்றமான மனநிலையை அவனது நண்பர்கள், குடும்பம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். புதிய வாழ்க்கை சார்ந்த அவனது முயற்சிகளோ கடும் தோல்வியில் முடிகிறது. ஏமாற்றம், ஆத்திரம், அநீதி, பேரிடர் என எல்லாமும் அவனை புதிய கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கிறது. மீண்டும் புதிய மனிதனாக மாறத் தொடங்குகிறான்.

மாலை 4.30 மணி | VICTORIA | VIKTORIJA | DIR: TORUN LIAN | NORWAY | 2013 | 106'

விக்டோரியா மற்றும் ஜோஹன்னாஸ் இருவரிடையே ஒரு சோகக் காதல் இழையோடுகிறது. மிகப்பெரிய நிலப்பிரபுவின் மகள் அவள். அவனோ ஏழைத் தொழிலாளியின் மகன். ஆயினும் அவர்களுக்குள் ஆழமான காதல் மலர்கிறது. ஆனால் அந்தக் காதல் ஒரு பணக்கானுக்காக உதிர்கிறது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் உயிரோட்டமானவை. படத்திற்கான பின்னணிக் காட்சிகளுக்கான ஒளிப்பதிவும் இடங்களும் திரைப்படத்தை ஒரு காவியம் போல செதுக்கியுள்ளது.

மாலை 7.15 மணி | THE ILLUMINATION | ILLUMINACJA | DIR: KRZYSZTOF ZANUSSI POLND | 1973 | 91'

பிரதான பாத்திரம் ஒரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து படிக்கத் தொடங்குவதிலிருந்து, அவர் தனது இளநிலை ஆய்வறிக்கையை முடிக்கும் வரை அவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே இப்படம். காதல், நண்பணின் மரணம், எடுத்துக் கொண்ட துறையில் போராட்டம், கணவனாக, அப்பாவாக மாறிய பிறகு வரும் நெருக்கடி, என வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலும் அவருக்கு தத்துவார்த்தை எண்ணங்களை தருகின்றனர். ஒரு இயற்பியலாளரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x