Published : 06 Jan 2017 04:33 PM
Last Updated : 06 Jan 2017 04:33 PM

சென்னை பட விழா | ஐனாக்ஸ்-2 | ஜன.7 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை (ஜன.7) ஐனாக்ஸ்-2வில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | INVISIBLE / INVISIBLE | DIR: DIMITRI ATHANITIS | GREECE |2016 | 84'

தான் வேலை செய்யும் தொழிற்சாலையிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் ஆரிஸ் அதிர்ச்சியடைகிறான். மீண்டும் பணியில் சேர செய்யும் முயற்சிகள் வீணாக, கோபத்தில் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ள முடிவு செய்கிறான். ஆரிஸின் முன்னாள் மனைவி, அவர்களின் 6 வயது மகனை ஆரிஸிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லும்போது ஆரிஸின் முடிவு தீர்மானமாகிறது.

காலை 12,15 மணி | THE MINE / JATTILANEN | DIR: ALEKSI SALMENPERA | FINLAND | 2016 | 93'

பின்லாந்து நாட்டின் பிரபலமான சுரங்க நிறுவனமான தல்விவாராவின் கனவு திட்டமாக இருக்கிறது நிக்கல் சுரங்கம். அந்த நிறுவனத்தில் ஜஸ்ஸிக்கு வேலை கிடைக்கிறது. சுரங்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறுவதற்கான பணியில் அவர் ஈடுபடுகிறார். அப்போதுதான் ஜஸ்ஸிக்கு பல உண்மைகள் தெரிய வருகின்றன. தல்விவாரா சுரங்க நிறுவனம் நிக்கல் வெட்டி எடுக்க அனுமதி பெற்றுவிட்டால் அருகாமையில் இருக்கும் உள்ளூர் நீராதாரங்கள் வெகுவாக பாதிக்கப்படும் எனத் தெரிந்து கொள்கிறார். இதை நிறுவனத்திடம் தெரிவிக்கிறார். ஆனால், அதை கண்டும் காணாமல் இருக்குமாறு நிறுவனம் கூறுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் ஜஸ்ஸியின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தல்விவாரா சுரங்கத் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது என்னவென்பதே படத்தின் கதை.

பிற்பகல் 2.30 மணி | WANDERING / THUDONGKAWAT | DIR: BOONSONG NAKPHOO | TAILAND | 2013 |125'

மனைவி, மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாபின் வாழ்க்கை, அவன் மகன் இறந்து மனைவி பிரிந்ததும் மொத்தமாக மாறுகிறது. அவனது கிராமத்து மக்களும் அவனை ஒதுக்க, தனிமையில் விரக்தியடைகிறான். தன்னால் இந்த நிலையிலிருந்து மீள முடியாத என நினைக்கும் போது, ஒரு பவுத்த துறவியின் வடிவில் நம்பிக்கை பிறக்கிறது. அவர், நாபை புத்த துறவியாக மாறச் சொல்கிறார்.

மாலை 4,30 மணி | ON THE OTHER SIDE | S ONE STRANE | DIR: ZRINKO OGRESTA | CROATIA | 2016 | 85'

20 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்னா தனது குடும்பத்தை ஜாக்ரெபிற்கு மாற்றுகிறாள். அதாவது இவர்கள் வாழ்க்கையை ஏறக்குறைய சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் சம்பவங்களிலிருந்து குடும்பத்தை நகர்த்திச் செல்கிறாள் வெஸ்னா. எனினும் எதிர்பாராத அழைப்பு ஒன்று அவள் இத்தனையாண்டுகளாக படாதபாடுபட்டு மறைத்த ரகசியத்தை மீண்டும் கொண்டு வருகிறது.

மாலை 7,15 மணி | FOREIGN BODY | CORPS ETRANGER | DIR: RAJA AMARI | TUNISIA/FR | 2016 | 92'

துனீசிய புரட்சியைத் தொடர்ந்து, இஸ்லாமிய அடிப்படைவாதியான தனது சகோதரனை காட்டிக் கொடுத்தவள் இளம் சாமியா. அவனுக்கு பயந்து பிரான்ஸுக்கு குடிபெயர்கிறாள். அங்கு அவளுக்கு கிடைக்கும் அனுபவங்கள், அவளுக்குள் அதிகரிக்கும் பயம், பதற்றம், அது அவளை சுதந்திரப் பாதைக்கு இட்டுச் செல்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x