Published : 09 Jan 2017 07:08 PM
Last Updated : 09 Jan 2017 07:08 PM

சென்னை பட விழா | கேஸினோ | ஜன.10 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் செவ்வாய்க்கிழமை (ஜன.10) கேஸினோவில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »



காலை 10.00 மணி | OUR EVERYDAY LIFE | NASA SVAKODNEVNA | DIR: INES TANOVIC | BOSNIA | 2015 | 90'

முன்னாள் இளம் போர் வீரர் ஒருவர் போருக்குப் பிந்தைய போஸ்னியாவின் தீர்வு காணப்படாத அரசியல் - பொருளாதார கடினச் சூழ்நிலைமைகளை எதிர்கொள்கிறார். இவரது தந்தை முகமது தொழிற்சாலை ஒன்றின் உயரதிகாரி. ஆனால் இவரது தலைமைக்கு எதிராக சதி நடைபெறுகிறது. தாய் மரியா ஓய்வு பெற்ற ஆசிரியை, சூழ்நிலைகள் நல்ல நிலைமைகளுக்குத் திரும்பும் என்ற தீரா நம்பிக்கையுடன் இருப்பவர். திருமணமாகாத ஆனால் கருத்தரித்த மகள் செனடா, ஆகியோரின் நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், வாழ்க்கைத் தெரிவுகள் குறித்த தந்தையின் கண்டிப்புகள் இவற்றுக்கிடையே மோசமடைகிறது தாயின் உடல்நிலை.

பிற்பகல் 12.00 மணி | THE MINE / JATTILANINEN | DIR: ALEKSI SALMENPERA | FINLAND | 2016 | 93'

பின்லாந்து நாட்டின் பிரபலமான சுரங்க நிறுவனமான தல்விவாராவின் கனவு திட்டமாக இருக்கிறது நிக்கல் சுரங்கம். அந்த நிறுவனத்தில் ஜஸ்ஸிக்கு வேலை கிடைக்கிறது. சுரங்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறுவதற்கான பணியில் அவர் ஈடுபடுகிறார். அப்போதுதான் ஜஸ்ஸிக்கு பல உண்மைகள் தெரிய வருகின்றன. தல்விவாரா சுரங்க நிறுவனம் நிக்கல் வெட்டி எடுக்க அனுமதி பெற்றுவிட்டால் அருகாமையில் இருக்கும் உள்ளூர் நீராதாரங்கள் வெகுவாக பாதிக்கப்படும் எனத் தெரிந்து கொள்கிறார். இதை நிறுவனத்திடம் தெரிவிக்கிறார். ஆனால், அதை கண்டும் காணாமல் இருக்குமாறு நிறுவனம் கூறுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் ஜஸ்ஸியின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தல்விவாரா சுரங்கத் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது என்னவென்பதே படத்தின் கதை.

பிற்பகல் 2.00 மணி | DEATH IN SARAJEVO | DIR: DANIS TANOVIAE | SARBIA | 2016 | 85'

சரஜிவோவில் உள்ள ஓட்டல் ஐரோப்பாவில் ஐரோப்பிய யூனியன் சார்பில் நடக்க உள்ள மிகப்பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 1914ல் கொல்லப்பட்ட ஆர்ச்டக் ஃப்ரான்ஸ் ஃபெர்டினேந்த் எனும் தேசிய தலைவரின் நூற்றாண்டு விழாவுக்காக அந்த ஓட்டல் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அந்த ஓட்டலின் பணியாளர்கள் வேறு ஒரு பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வரவில்லை. ஏற்கெனவே ஓட்டல் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணியாளர்கள் நிகழ்ச்சி இரவின்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென முடிவு எடுக்கிறார்கள். ஒரு பக்கம் விழா ஏற்பாடுகள் இன்னொரு பக்கம் வேலை நிறுத்தப் பிரச்சனைகள். இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும் சவாலை திரைப்படம் மிக விறுவிறுப்பாக சொல்கிறது.

மாலை 4.40 மணி | I, OLGA HAPANAROVA | JA, OLGA HEPNAROVA | DIR: PETR KAZDA | CZECH | 2016 | 105'

செக்கோஸ்லோவிகியாவைச் சேர்ந்த 22 வயது பெண் ஹெப்னரோவா 1973ஆம் ஆண்டு ஜூலை 10ந்தேதி பிரேக்கில் அப்பாவி மக்கள் பலர் மீது லாரி ஏற்றிக்கொன்றவள். இதற்கான காரணமாக அவள் சொன்ன வாசகம் “நான் ஆல்கா ஹெப்னரோவா, மிருகத்தனத்தின் பலி உங்களுக்கு மரண தண்டனையை விதிக்கிறது” என்பதுதான். இயக்குநர் பீட்டர் கஸ்டாஹவம் தாமஸ் வெய்னர்ப்பும் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் அதற்கான வரலாற்றுக் காரணத்தைத் தேடியுள்ளனர்.

இரவு 7.00 மணி | THE HALF / YAKIM | DIR: CAGIL NARHAK AYDOGDU | TURKEY | 2016 | 98'

தாய் இறந்தவுடன் ஆதரவின்றி திரிகின்றனர் 15 வயது ஃபிடனும், அவள் தம்பியும். அஜியனில் புதிய வாழ்க்கை தொடங்க செல்கின்றனர். அங்கு மனநலம் குன்றிய சாலே என்பவனது நட்பு ஃபிடனுக்கு கிடைக்கிறது. திருமணமாகி 35 வருடங்கள் ஆனாலும் மனநல பாதிப்பால் சாலே அவதிப்படுகிறான். தனிமையில் வாடும் ஃபிடனும் சாலேவும் இணையும் பயணமே யாகிம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x