Last Updated : 02 Jun, 2016 02:32 PM

 

Published : 02 Jun 2016 02:32 PM
Last Updated : 02 Jun 2016 02:32 PM

ரசிகர்களுடன் ரஜினி கேள்வி-பதில் நிகழ்ச்சி: கபாலி இசை வெளியீட்டு விழாவில் திட்டம்

'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்களின் கேள்விக்கு ரஜினி பதில் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ருத்விகா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 9-ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டது. தற்போது ஜூன் 11-ம் தேதிக்கு இந்நிகழ்ச்சியை மாற்றி இருக்கிறார்கள். அமெரிக்காவில் குடும்பத்தினருடன் ஓய்வில் இருக்கும் ரஜினி, இசை வெளியீட்டுக்கு முன்பு சென்னை திரும்புகிறார்.

மேலும், இவ்விழாவில் ரசிகர்களின் கேள்விக்கு ரஜினி பதிலளிப்பது போன்று ஒரு நிகழ்ச்சியை இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சித் தொகுப்பில் இடம்பெற செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் ரஜினியிடம் இது குறித்துப் பேச இருக்கிறது படக்குழு. இதற்கு ரஜினி அளிக்கும் பதிலைப் பொறுத்து, இசை வெளியீட்டு விழாவில் இடம்பெறும்.

தற்போது படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன. கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிந்து படத்தின் இணைத்தவுடன், தணிக்கைக்கு விண்ணப்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x