Published : 16 Mar 2017 07:54 AM
Last Updated : 16 Mar 2017 07:54 AM

திரைத் துறையை காப்பாற்றவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டி: கோவையில் நடிகர் விஷால் கருத்து

திரைத் துறையை காப்பாற்றவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று நடிகர் விஷால் கூறினார்.

சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் போட்டி யிடுகிறார். இதையொட்டி, கோவை, திருப்பூர் மாவட்டங் களைச் சேர்ந்த தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக கோவைக்கு விஷால் நேற்று வந்தார். அவருடன் இயக்குநர்கள் மிஷ்கின், எஸ்.ஆர்.பிரபு, தயாரிப் பாளர்கள் ஞானவேல் ராஜா, நடிகர்கள் உதயா, நந்தா ஆகி யோரும் வந்தனர்.

நடிகர் விஷால் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: திரைத் துறையை காப்பாற்று வதற்காகவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடு கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை. எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணப் படவில்லை. சினிமாவில் தயாரிப்புத் துறை என்பது மிகவும் முக்கியமானது. இத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையை மாற்றவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

கோவை, திருப்பூர் மாவட்ட தயாரிப்பாளர்களைச் சந்தித்து, நாங்கள் எதற்காக இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என்பதை விளக்குவதற்காக கோவை வந்துள்ளோம். தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக நடிகர் கமலை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். அவர் எங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். ஜனநாயக முறையில் துணிச்சலான கருத்துகளை கூறி வருகிறார் என்றார்.

இயக்குநர் மிஷ்கின் கூறும் போது, “நடிகர் விஷால் குறித்து தயாரிப்பாளர் தாணு, இயக்கு நர் சேரன் ஆகியோர் விமர்சித் துள்ளனர். விஷால் 24 மணி நேரமும் உழைக்கக்கூடியவர். விஷால் மீது ஆதாரமற்ற புகார்களைக் கூறுவது தவறானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x