Published : 06 Jan 2017 04:46 PM
Last Updated : 06 Jan 2017 04:46 PM

சென்னை பட விழா | கேஸினோ, ஆர்சிசி | ஜன.7 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை (ஜன.7) கேஸினோ மற்றும் ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | AYIRATHIL ORUVAN | DIR: B.R.PANTHULU | TAMIL | 1965 | 174'

பகல் 12.00 மணி காட்சி இல்லை

பிற்பகல் 2.30 மணி | THROUGH THE WALL / LAAVOR ET HAKIR | DIR: RAMA BURSHTEIN | ISRAEL | 2016 | 110'

32 வயதான மிஷேலுக்கு இப்போதுதான் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. திருமண ஏற்பாடுகள் களை கட்டிக்கொண்டிருக்க, சரியாக ஒரு மாதத்துக்கு முன்னதாக கல்யாணம் நின்று போனது. மாப்பிள்ளைக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றார்கள். மிஷேலால் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. கடவுளை நினைத்து வழிபட ஆரம்பித்தாள். அவர் எனக்குக் கொடுக்க நினைப்பதை சரியான நேரத்தில் அளிப்பார் என்ற உறுதியோடு இருந்தாள். ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளும் திட்டம் தோன்றியது. உடனே ஒரு மாதத்துக்கு திருமண ஆடையோடு, அபார்ட்மெண்டோடு, மாப்பிள்ளை வருவார் என்று பயணத்தைத் தொடங்கினாள்... அப்புறம்...?

மாலை 4.40 மணி | THE STOP OVER | DIR: DELPHINE COULIN MURIEL COULIN | FRANCE | 2016 | 102'

ஆப்கானிஸ்தானில் போர்க்களத்தில் பணியாற்றி இரண்டு இளம் ராணுவ வீரங்கானைகள் அரோரா, மரைன். இவர்களின் பனிச்சுமையை குறைக்கும் வகையில் இருவருக்கும் 3 நாள் விடுப்பு அளிக்கப்படுகிறது. இருவரும் சைப்ரஸ் நாட்டுக்குச் செல்கின்றனர். அங்கு சுற்றலாப் பயணிகள் தங்கும் பிரபல விடுதியில் தங்குகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் குதூகலம் தங்களைச் சூழ்ந்திருந்தாலும் அவர்களால் போரின் கோர முகத்தை மறக்க முடியவில்லை.

மாலை 7.00 மணி | SHELLEY / SHELLEY | DIR: ALI ABBASI | DENMARK | 2016 | 92'

இளம் ருமேனிய பெண் எலெனா நோயிலிருந்து மீளூம் லூசி, இவரது கணவர் காஸ்பர் ஆகியோர் வசிக்கும் டென்மார்க் கிராமப்பகுதிக்கு பணிப்பெண்ணாக வருகிறாள். நவீன வாழ்க்கையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட அடர்ந்த காட்டில் வாழ்க்கை. வீட்டில் மின்சாரம் கூட கிடையாது. எலெனா தனது தினசரி பணிப்பெண் வேலைக்குத் தயாராகிறாள், லூசிக்குக்கும் அவரது கணவருக்கும் தேவையானதை சமைத்துக் கொடுக்கிறாள். இரு பெண்களும் நெருக்கமாகின்றனர் ஆனால் இருவரும் நெருக்கமாக நெருக்கமாக அன்னியமாகவே உணர்கின்றனர்.

லூசிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு அவள் இனி குழந்தைப் பேறு இல்லாதவளாகிறாள். இந்நிலையில் லூசி-காஸ்பர் தம்பதிக்கு குழந்தையைப் பெற்றுக் கொடுக்க எலெனா ஒப்புக் கொள்கிறாள், இதற்கான கணிசமான தொகையும் அவளுக்கு அளிக்க ஒப்புக் கொள்ளப்படுகிறது. எலெனாவின் கருத்தரிப்பு தம்பதியினரிடையே மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுவும் சிறிது காலத்திற்கே நீடிக்கிறது. இந்நிலையில் எலெனாவின் மிகவும் விசித்திரமான நடத்தை தம்பதியினரை பிரச்சினைக்குள்ளாக்குகிறது. தாங்க முடியாத திடீர் மனப்பிரமைகள், காட்சி ரூபங்கள், உணர்வுகள் ஆகியவை எலெனாவிற்குள் ஏதோ ஒரு பயங்கரம் உருவாகி வருவதை அறிவுறுத்துவதாக அமைகிறட்து. அவளுக்குள் உயிர் ஒன்று அதிவேகமாக வளர்ந்து வருவது தெரிகிறது. ஏதோ பயங்கரமான தவறு ஒன்று நிகழப்போகிறது என்ற எண்ணம் வலுக்கிறது. அதாவது ஒவ்வொருவர் வாழ்க்கையையுமே அதிர்ச்சிக்குள்ளாகும் ஒரு தீய சக்தி உருவாகிறது.

ரஷ்ய கலாச்சார மையம்

காலை 10.00 மணி | SAHAJ PAATHER GAPPO / COLOURS OF INNOCENCE | DIR: MANAS MUKUL PAL | BENGALI | 2016 | 86'

சோட்டு மற்றும் கோபால் ஆகிய இரு சகோதரர்களின் இளமை பருவமும் அவர்களது தந்தைக்கு நேர்ந்த விபத்தினால் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. சுற்று சூழல்கள் அழுத்த கோபால் விரைவாக வாழ்வில் பக்குவம் அடைகிறான். குடும்பத்தின் வருமானத்துக்காக அவன் வேலைக்கு செல்கிறான். அந்த இரு சிறுவர்களின் வாழ்க்கையை யதார்த்தமான் களத்துடன் விளக்குகிறது கலர்ஸ் ஆப் இன்னசன்ஸ் என்ற திரைப்படம்.

காலை 11.30 மணி | MGR GOVERNMENT FILM AND TELEVISION INSITUTE STUDENTS FILM

பிற்பகல் 2.00 | KAADU POOKKUNNA NERAM | DIR: DR.BIJU | MALAYALAM | 2016 | 106'

தனது படங்களில் வலுவான அரசியலை பேசத் தயங்காதவர் இயக்குநர் பிஜுகுமார். இவரது 'காடு பூக்குன்ன நேரம்' படமும் அப்படித்தான். பிஜுகுமாரின் 'வலிய சிறகுள்ள பக்‌ஷிகள்', 'பேரரியாதவர்', 'ஆகாஷத்திண்டே நிறம்', 'வீட்டிலேகுள்ள வழி' போன்ற படங்களைப் போல இந்தப் படத்திலும் கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் கிடையாது.

தீவிரவாதிகளை கைது செய்வது என்ற போர்வையில் ஆதிவாசிகளையும், தலித்துகளையும் அதிகாரிகள் ஒடுக்குகின்றனர். அதிகார மையத்தின் தரகர்களாக செயல்படுபவர்களுக்கும், சட்டம் பாதுகாப்பு என்ற பெயரால் ஒடுக்கப்படுபவர்களுக்கும் இடையே நடக்கும் மோதலே என் படம் என்கிறார் இயக்குநர். | விரிவாக வாசிக்க > >சென்னை பட விழாவில் தவறவிடாதீர்.... 'காடு பூக்குன்ன நேரம்'

மாலை 4.00 மணி | NANUM ROUDYDHAAN | DIR: VIGNESH SHIVAN | TAMIL | 2016 | 140'

மாலை 6.30 மணி | IRAIVI | DIR: KARTHIK SUBBARAJ | TAMIL | 2016 | 160'

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x