Published : 31 Aug 2016 03:01 PM
Last Updated : 31 Aug 2016 03:01 PM

நெட்டிசன் நோட்ஸ்: இசையில் யுத்தம் செய்பவன் யுவன்!

மனம் லயிக்கும் காதல் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாள் இன்று. அதை இந்திய அளவில் >#HBDYuvan என்ற ஹேஷ்டேகில் ட்ரெண்டாக்கினர் அவரின் ரசிகர்கள். சமூக ஊடகங்களில் இன்றைய நாளைத் தனதாக்கிய யுவனின் பிறந்தநாள் பகிர்வுகள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

>senthamilsiva

நெஞ்சோடு கலந்திடு உறவாலே...- பிறந்த நாள் வாழ்த்துக்கள் யுவன்.

>பிரேம்

மகிழ்ச்சி சோகம் துன்பம் தனிமை வெறுமை என என் அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் இசை தரும் இசையமைப்பாளர். #HBDYuvan

>வாழவந்தார் ‏

யுவன் எனும் இசையரக்கன் உங்களை கொள்ளை கொண்டது எப்போது முதல்? #எனக்கு துள்ளுவதோ இளமை படம் தியேட்டரில் பாத்து கும்பலாக ஆட்டம் போட்டப்போது..

>Banksy Zero

சின்மயி யுவன் இசைல பாடுன பாடல்கள். மயக்கும் இசையும் மந்திரக்குரலும் இணைந்த புள்ளி!

>நாயகன்

மெல்லிய இசையில் மெய்சிலிர்க்க வைப்பவர் யுவன் #HBDYuvan

>guru

80-களில் இளையராஜா,

90-களில் ரகுமான்,

2000-ல் யுவன்.

அந்தந்த காலகட்டத்திற்கான இசை ஆளுமைகள்

>Aadhi

மனதை திருடி விட்டாய் படத்துல மஞ்சக்காட்டு மைனா பேமஸ் நிறைய பேருக்கு தெரியும்..ஆனா குட்டி குட்டி பனித்துளியேனு இன்னொரு செம பாட்டிருக்கு..

>யுவன் சங்கர் மஹ்தூம் ‏

கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

>இளவேனில் ‏

காதலை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் சரி, காதல் சோகமாக இருந்தாலும் சரி அதைப் பாட்டில் கொண்டு வருவதில் யுவன் எப்பவுமே டாப்தான்.

>சௌம்யா :))

you won ன்னு பிறந்ததுமே பேர் வச்ச தீர்க்கதரிசியா எங்க ராஜா.

>பார்த்தா ‏

பொண்ணுங்களுக்கு ஒரு சிண்ட்ரெல்லா ஸ்டோரின்னா பசங்களுக்கு ஒரு யுவன்சங்கர்ராஜா பாட்டு! #HBDYuvan

>Viknesh

யுவன் இசை மட்டும் இல்லையெனில் என் தனிமை இன்னும் வெறுமை ஆகியிருக்கும்..

>Varnam FM ‏

ராஜாவின் இசை வாரிசு

சர்ச்சைகளின் சரித்திர சக்கரவர்த்தி

இருப்பினும், சலிக்காத இசை தந்த இசையமைப்பாளர் யுவன்..

>Deva

பல மனசு வலிக்கிற பாட்டுக்களைக் கொடுத்தது யுவன் தான்! #HBDYuvan

>Mr. வெயில் ‏

தமிழ் எம்ஏ என்ற ஒற்றை ஆல்பம் எத்தனை யுகம் கடந்தாலும் யுவன் பேரைச் சொல்லும்.

>selvaraj

யுவன் என்றால் இசையில் யுத்தம் செய்பவன் என்று பொருள். #HBDYuvan

>subha

நீ கொன்னாக் கூட குத்தமில்ல.... #HBDYuvan

>Arul Raj

இசை மகன்; இனிபவன்; ரசிகர்களின் இதயத்தில் இருப்பவன்; ஒவ்வொரு தசையிலும் அசையிலும் இசையுடன் வசிப்பவன் நம் யுவன். -நா.முத்துகுமார் #HBDYuvan

>ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா

எனக்கு கேட்ட உடனே மனசு வலிக்கிற யுவன் இசை வரி,

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்.. கண்ணீர் துளியின் ஈரம் வாழும்!

>வாலு Talks

அட்லீஸ்ட் ஒருதடவையாச்சும் யுவன் பாட்ட ரிங்டோனா வைக்காத மொபைல் இருக்கவே முடியாது!! #HBDYuvan

>RJAadhi

யாரடி நீ மோகினி படத்துல நயன்தாராவ தேவதையா பாக்க வெச்சதுல பெரும்பங்கு யுவன் மியூஸிக்குக்கு உண்டு.

>prasath

நான் எல்லாரோட பாட்டும் கேட்கிறேன். ஆனா ராஜா சார்க்கு அப்புறம் இசைன்னா அது யுவன்தான். மெல்லிய இசையில் மெய்சிலிர்க்க வைப்பவர் யுவன் #HBDYuvan

>Neethy Nilavan

இசையை ரசிக்கப் பழக்கியவன் #யுவன்

>Karthi Keya Raja

மனம் ஒரு மாதிரி சுனங்கி இருக்கும் பொழுதில்..

ஏதுமற்ற வெறுமை சூழ் பொழுதுகளில்...

வானம் பார்த்த பூமியாய் நினைவுகள் கனத்து கிடக்கும் இரவுகளில்....

இவன் தேவைப்படுகிறான் எனக்கு...

ஆம்... அவன் - இவன் என எவன் வந்த போதும்...

மழலையின் புன்னகையாய், பெரும் மழையின் தூறல்களாய், உயிர் புரட்டும் குளிரில் கதகதப்பான கருந் தேனீராய், கண்ணீர் துடைத்து இதயம் வருடும் யுவன்.

>Simbu Prakash

ஒரு பெரிய நடிகரின் ரசிகர் பலத்தைப்போல் பெரும் ரசிகர்களை கொண்ட ஒரே இசையமைப்பாளர் யுவன்.

Naveen Kumar

இசையைப் பற்றி எனக்கு தெரிந்த பருவத்தில் இருந்தே நான் யுவனின் ரசிகனாகி விட்டேன்.

>Ashok Selvakumar

இசைக்கு இசை அவதரித்த தினம்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x