Last Updated : 03 Jan, 2014 05:00 PM

 

Published : 03 Jan 2014 05:00 PM
Last Updated : 03 Jan 2014 05:00 PM

ஜில்லா டிரெய்லர் எப்போது? : இயக்குநர் நேசன் விளக்கம்

'ஜில்லா' படத்தின் டிரெய்லர், 2 நாட்கள் கழித்து YOUTUBE தளத்தில் வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் நேசன் தெரிவித்தார்.

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடிக்க, நேசன் இயக்கியிருக்கும் படம் 'ஜில்லா'. இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்திருக்கிறார். இப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

இதுவரை 'ஜில்லா' படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. படத்தின் 2 டீஸர்கள் மட்டுமே YOUTUBE தளத்தில் வெளியாகியுள்ளன. படத்தின் டிரெய்லர் வெளியாகாததால், வெறும் டீஸர் மட்டும் தானா என்ற பேச்சு நிலவியது.

இதுகுறித்து 'ஜில்லா' இயக்குநர் நேசனை தொடர்பு கொண்டு பேசியபோது, "ஒரே டிரெய்லரா வெளியிடாம, சின்ன சின்ன டீஸரா வெளியிட முடிவு பண்ணினோம்.

படத்தோட முதல் டீஸரை, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். YOUTUBE தளத்தில் இந்தியாவில் அதிகம் பார்த்த வீடியோக்களில், 'ஜில்லா' டீஸர் தொடர்ச்சியாக 2 நாட்கள் இடம்பெற்றது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

படத்தோட ஒன்றரை நிமிட டிரெய்லரை இன்னும் 2 நாட்களில் YOUTUBE தளத்தில் வெளியிட தீர்மானித்திருக்கிறோம். ஜனவரி 6ம் தேதி வெளியிடலாம் என்று இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x