Last Updated : 12 Jul, 2016 02:31 PM

 

Published : 12 Jul 2016 02:31 PM
Last Updated : 12 Jul 2016 02:31 PM

சுசீந்திரன் - விஷ்ணு பட நாயகியாக ஸ்ரீதிவ்யா ஒப்பந்தம்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக ஸ்ரீதிவ்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

உதயநிதி நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம், நடிகர்களின் தேதிகள் பிரச்சினை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இப்பட இடைவெளியில் விஷ்ணு விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்றை துவங்கினார் சுசீந்திரன்.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. உதயநிதி படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட மஞ்சிமா மோகன், விஷ்ணு விஷால் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை படக்குழுவினர் உறுதிபடுத்தவில்லை.

இந்நிலையில், தற்போது ஸ்ரீதிவ்யா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த 'ஜீவா' படத்தில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, இப்படத்துக்காக இமான் ஒரு பாடலை முடித்துக் கொடுத்திருக்கிறார். முதன் முறையாக இப்படத்துக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி. ஜூலை 15ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x