Published : 19 Jan 2017 03:54 PM
Last Updated : 19 Jan 2017 03:54 PM

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் கண்களில் சகோதரத்துவம் மட்டுமே இருந்தது: சேரனின் மகள் பெருமிதம்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து களத்துக்குச் சென்றபோது, போராட்டக்காரர்களின் கண்களில் சகோதரத்துவத்தை மட்டுமே கண்டேன் என்று சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் நிவேதா பிரியதர்ஷினி கூறியதாவது:

''இன்று நான் மெரினா கடற்கரையில் கண்ட ஆண் மகன்களைப் பெற்றெடுத்த ஒவ்வொரு பெற்றோரும் பெருமைக்குரியவர்கள்!

அம்மா, சித்தி, தங்கை, தோழி, அவளின் அம்மா, நான் மற்றும் சிலர் எனப் பெரிய பெண்கள் கூட்டத்தோடேயே சென்றிருந்தேன். ஆயிரம் சொன்னாலும் போகும் வரை இருந்த பதற்றம், போன பிறகு துளிகூட இல்லை.

அனைவரின் கண்களிலும் வெறும் சகோதரத்துவம் மட்டும்! போராட்டம் மற்றும் அதன் குறிக்கோள் மட்டும். ஒருவரின் கண்கள் கூட அலைபாயவில்லை! உதடுகளில் குறிக்கோள் பற்றிய வார்த்தைகள் மட்டும்! ஆண் பெண் என்ற பேதமில்லை!

மீண்டும் பெருமிதம் கொண்டேன் தமிழர்களுக்காக, ஒரு தமிழச்சியாக பிறந்ததற்காக!''

இவ்வாறு தன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார் நிவேதா பிரியதர்ஷினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x