Published : 17 Jul 2016 11:06 AM
Last Updated : 17 Jul 2016 11:06 AM

பயத்தை ஏற்படுத்திய ‘விக்டர்’ நம்பிக்கையும் தந்தது: அருண் விஜய் நேர்காணல்

‘‘முடியாதது என்று எதுவுமே கிடையாது. உண்மையாக உழைத்தால், கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும். அந்த வகையில் ‘குற்றம் 23’ படமும் இருக்கும்’’-முழு நம்பிக்கையுடன் பேசினார் ‘விக்டரில்’ இருந்து ‘வெற்றிமாறனாக’ மாறியிருக்கும் அருண் விஜய்.

‘குற்றம் 23’ படத்தில் என்ன சிறப்பு?

சமூகத்தில் நடக்கிற ஒரு விஷ யத்தை எடுத்து ரொம்ப அழகாக சொல்லி யிருக்கிறோம். மருத்துவக் களத்தில் ரொம்ப வலுவான கதையாக இருந்தது தான் என்னை முதலில் ஒப்புக்கொள்ள வைத்தது. ராஜேஷ்குமார் நாவலின் தழுவல் என்றாலும், அறிவழகன் அதில் நிறைய விஷயங்களைச் சேர்த்திருக் கிறார். முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். ‘என்னை அறிந்தால்’ விக்டர் கதா பாத்திரத்துக்குப் பிறகு என் நடிப்பில் வரக்கூடிய திரைப்படம். விக்டர், கோட்டுக்கு அந்தப் பக்கம் என்றால், இப்படத்தில் வரும் வெற்றிமாறன் கோட்டுக்கு இந்தப் பக்கம். ரொம்ப ஸ்டைலான, எதார்த்தமான போலீஸாக காட்டியிருக்கிறார்.

ஒரு தயாரிப்பாளராக உருவாவதற்கு காரணம் என்ன?

நடிப்பைத் தாண்டி திரையுலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் ஃபிலிம் மேக்கிங் படித்தேன். சினிமாவுக்கு நாம ஏதாவது பண்ண வேண்டும் என்று இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறேன். தற்போது உள்ள சூழலில் சினிமா தயாரிப்பு கொஞ்சம் ஆபத்தானதுதான். அதையும் மீறி ஈடுபட்டுள்ளேன் என்றால் இக்கதையின் மீதும், குழுவின் மீதும் வைத்த நம்பிக்கைதான் காரணம்.

‘விக்டருக்கு’ கிடைத்த வரவேற்பு ஓரளவு பயத்தையும் கொடுத்திருக்குமே..

ஓராண்டு இடைவெளியைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே, நான் எவ்வளவு பயந்திருப்பேன் என்று. பயத்துடன் கூடவே எனக்கு நிறைய நம்பிக்கையையும் கொடுத்தது. அதனால்தான், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்து இக்கதையைத் தேர்வு செய்தேன். வில்லன் கதாபாத்திரம் என்பதை மீறி ஒரு நடிகனாக என்னை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். அதற்கு முதலில் என் நண்பர்கள், குடும்பத்தினர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வில்லனாக தொடர்ந்து நடிப்பீர்களா?

நாயகனாக நடிக்கிற நேரத்தில், நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகள் வந்தால் மட்டுமே வில்லனாக நடிப்பேன். வழக்கமான வில்ல னாக அல்லாமல், ‘விக்டர்’ மாதிரி யான கதாபாத்திரம் வந்தால் தெலுங்கு, கன்னடத்தில் வில்லனாக நடிப்பேன்.

‘விக்டர்’ இல்லாமல் இருந்தால், அருண் விஜய் இப்போது எப்படி இருப்பார்?

‘உங்களுக்கு கிடைக்கிறது, கிடைக் காம இருக்காது’ என்று தலைவர் ரஜினி சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. நான் ஒரு நடிகராகத் தெரிந்தது ‘தடையறத் தாக்க' படத்தில்தான். இவன் ஏதோ வித்தியாசமாக பண்ணுகிறான் என்ற பார்வை விழுந்தது. ‘விக்டர்’ என்னை வேறொரு இடத்துக்கு கொண்டுபோனது. இதையெல்லாம் ஒரு வளர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். அனைவருக்குமே நேரம், காலம் என்று உண்டு, அது எனக்கு ‘விக்டர்’ மூலமாக கிடைத்தது.

மீண்டும் உங்களை இயக்கப்போவதாக கெளதம் மேனன் கூறியிருந்தாரே?

எப்போதுமே அவருக்கு ஒரு கதாபாத்திரம் பிடித்துவிட்டது என்றால் உடனே எழுத ஆரம்பித்துவிடுவார். இந்நேரம் எனக்கான கதையை அவர் எழுத ஆரம்பித்திருப்பார். கூடிய விரைவில் அது நடக்க வேண்டும் என்பது என் ஆசையும்கூட.

ஸ்கை டைவிங் அடிக்கடி போகிறீர்கள். பின்னணியில் எதுவும் காரணம் இருக்கிறதா?

சாகசங்கள் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். இறங்கு வோமா, மாட்டோமா என்ற ரிஸ்க் அதில் உண்டு. ஒவ்வொரு முறை தரையைத் தொடும்போது ஒரு புது ஆளாக இருப்பீர்கள். புது ஆளாகும்போது, நிறையப் புது விஷயங்கள் யோசிக்கத் தோன்றும், செய்யத் தோன்றும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x