

‘‘நேயர்கள் நினைத்துக் கொண் டிருப்பது தவறு. ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகள் புனையப்பட்டவை அல்ல’’ என பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
‘பிக் பாஸ்’, ‘ஸ்பிளிட்ஸ்வில்லா’ போன்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாலிவுட் திரையுலகில் கால் பதித்தவர் சன்னி லியோன். இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் குறித்து பிடிஐக்கு அளித்த பேட்டி:
ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். முன்கூட்டியே புனையப்பட்ட சம்பவங்களை தான் இந்நிகழ்ச்சிகளில் காண்பிக்கின்றனர் என பெருவாரியான மக்கள் நினைக் கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பது பங்கேற்பாளர் களுக்கே தெரியாது. எதிர்பாராமல் இயல்பாக நடக்கும் நிகழ்ச்சிகள் தான் அப்படியே ஒளிபரப்பாகின்றன. முதல் முறையாக இந்நிகழ்ச்சியில் பங் கேற்றபோது மிகவும் பதற்றம் அடைந் தேன். பின்னர் சிலவற்றை புரிந்து கொண்டதும் இயல்பு நிலைக்கு திரும் பினேன். இவ்வாறு அவர் கூறினார்.
எம்டிவியின் ஸ்பிளிட்ஸ்வில்லா ரியாலிட்டி நிகழ்ச்சியின் 9-வது தொகுப்பு விரைவில் ஒளிபரப்பாகவுள் ளது. ‘‘பெண்கள் எங்கு ஆள்கின்றனர்’’ என்ற கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில், 15 ஆண்களும், 6 பெண் களும் நடிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை சன்னி லியோன் தொகுத்து வழங்கு கிறார்.