Last Updated : 10 Jun, 2017 03:33 PM

 

Published : 10 Jun 2017 03:33 PM
Last Updated : 10 Jun 2017 03:33 PM

தங்கல் நாயகி ஸைரா வாசிம் காஷ்மீரில் விபத்துக்குப் பின் மீட்பு

ஆமிர்கானின் 'தங்கல்' படத்தில் நடித்த காஷ்மீரி நடிகை ஸைரா வாசிம், ஸ்ரீநகரில் விபத்துக்கு உள்ளாகி, பின்னர் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக உள்ளூர்வாசிகள் கூறும்போது, ''ஸைராவின் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தால் ஏரிக்குள் நுழைந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உள்ளூவாசிகள் விரைவில் ஸைராவையும், ஓட்டுநரையும் மீட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக ஸைராவுக்கு காயங்கள் ஏற்படவில்லை. அவரின் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x