Last Updated : 20 Apr, 2017 03:27 PM

 

Published : 20 Apr 2017 03:27 PM
Last Updated : 20 Apr 2017 03:27 PM

தணிக்கையில் யு சான்றிதழ்: மே 12-ம் தேதி வெளியாகிறது சரவணன் இருக்க பயமேன்

'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. மே 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'மனிதன்' படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் உருவாகும் 'சரவணன் இருக்க பயமேன்', தளபதி இயக்கத்தில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' மற்றும் கெளரவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத ஒரு படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

எழில் இயக்கத்தில் உருவாகி வரும் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்துள்ளார்கள்.

இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியது படக்குழு.

அனைத்து பணிகளும் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைக்கவே, மே 12ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x