Last Updated : 14 Sep, 2016 05:51 PM

 

Published : 14 Sep 2016 05:51 PM
Last Updated : 14 Sep 2016 05:51 PM

நாயகனாகும் எண்ணமில்லை: இசையமைப்பாளர் யுவன்

படங்களில் நாயகனாகும் எண்ணமில்லை என்று இசையமைப்பாளர் யுவன் தெரிவித்தார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவா, ஜெய், வைபவ், விஜயலட்சுமி, மஹத், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'சென்னை 600028 2nd Innings'. வெங்கட்பிரபு மற்றும் சரண் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் டூப்பாடூ இணையத்தில் செல்போன் செயலியை இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டார். யுவன் வருவதற்கு முன்பாக வெங்கட்பிரபு பேசும் போது "யுவனின் அம்மாவுக்கு அவர் நாயகனாக நடிகக் வேண்டும் என்று ஆசை" என்று குறிப்பிட்டார்.

வெங்கட்பிரபு பேசியதை பத்திரிகையாளர்கள் கேள்வியாக யுவனிடம் எழுப்பினர். அதற்கு "'சென்னை 600028' 2-ம் பாகத்திலும் பிரேம்ஜி தான் நாயகன். இதைச் சொல்லாவிட்டால் கோபித்துக் கொள்வான். நான் நடிகனாவது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம். யுவன் எங்கே இருக்கிறார் என்றால் அறையில் இசையமைத்துக் கொண்டிருக்கிறார் என்பார்கள். முழுக்க அறை மூடிக் கொள்வேன். மொத்த நாளும் தப்பித்துவிடலாம். இசையமைக்கும் அறையில் பெரிய படுக்கை இருக்கிறது. தூங்கலாம், வீடியோ கேம் ஆடுலாம். ஆனால் இதை எல்லாம் படப்பிடிப்பில் செய்ய முடியாது.

நடிப்பு எவ்வளவு கடினம் என்பதை பிரேம்ஜியைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். எனக்கு நடிகனாகவும் எண்ணமில்லை. இசை ஆல்பங்களில் தோன்றும் எண்ணமிருக்கிறது" என்று குறிப்பிட்டார் யுவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x