Published : 05 Jan 2017 09:14 PM
Last Updated : 05 Jan 2017 09:14 PM

சென்னை பட விழா | கேஸினோ | ஜன.6 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை (ஜன.6) கேஸினோவில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை >>

காலை 10.00 மணி | A STORMY SUMMER NIGHT / ORAGE | DIR: FABRICE CAMOIN | FRANCE | 2015 | 85'

பியர், மரியா என்ற பாரசீக தம்பதி ஸ்பெயினுக்குச் செல்கின்றனர். உடன் தங்கள் மகளையும், தோழியையும் அழைத்துச் செல்கின்றனர். அப்போது பெரும் புயல் ஒன்று தாக்குகிறது. இதனால், அண்டலூசியன் நகரில் உள்ள சிறிய விடுதியில் தங்குகின்றனர். அந்த சிறிய நகரம் குற்றச் செயல்களுக்கு பெயர் போனது என அவர்கள் தெரிந்திருக்கவில்லை. போலீஸார் ஒரு வெளிநாட்டுத் தொழிலாளியை கொலைக் குற்றத்துக்காக தேடுகின்றனர். நிகழ்த்தப்பட்ட படுகொலையால் நகரமே வெகுண்டெழுகிறது.

பகல் 12.00 மணி | PAROLE / PAROLE | DIR: HOSSEIN MAKHAM | IRAN | 2016 | 92'

பிரச்சினையின் விளிம்பில் ஜோடி ஒன்று தங்கள் வயதையும் நிலையையும் உணர்ந்து ஒரு முக்கியமான முடிவை எடுக்கின்றனர். கருத்தரிப்புக்கான சிகிச்சையைப் பற்றிய அந்த முடிவு ஷாஹ்ர்ஸாத்துக்கும் அமிராலிக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்குகிறது. அவர்களுக்கிடையே உள்ள கட்டாய ரகசியம் பெரும்சோகத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

பிற்பகல் 2.30 மணி | IT NOT THE TIME OF THE MY LIFE / ERNELLAEK FARKASEKNAL | DIR: SZABOLCS HAJDU | HUNGARY | 2016 | 81'

மேம்படுத்தும் பொருட்டு, எர்னெல்லா மற்றும் ஆல்பெர்டா தங்களின் 10 வயது பெண் லாராவுடன் ஒரு வருடத்துக்கு முன் தங்கள் கிராமத்தை விட்டுச் சென்றவர்கள். ஆனால் ஸ்காட்லாந்தில் வாழ முடியாமல் திரும்புகின்றனர். போக இடமில்லாமல், எர்னெல்லாவின் சகோதரி எனெல்லாவின் வீட்டுக்குச் செல்கின்றனர். எனெல்லாவின் கணவன் ஃபர்காஸ், மகன் ப்ரூனோ ஆகியோரும் அங்கிருக்கின்றனர். இதற்கு முன் இரு குடும்பங்களும் இணக்கமாக இருந்ததில்லை. எனெல்லாவின் குடும்பத்தில் பணப் பிரச்சினை வேறு. இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில் இரு குடும்பம் ஒன்றாக எப்படி, எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்க முடியும்?

மாலை 4.40 மணி | THE HAPPIEST DAY IN THE LIFE OF OLLII MAKI | DIR: JUHO KUHO KUOSMANEN | FINLAND | 2016 | 90'

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பின்லாந்து நாட்டு சார்பில் முதன்முறையாக பங்கேற்க ஆலி மக்கிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவர் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியிருந்த நிலையில் இரண்டாவது சுற்றில் படுதோல்வி அடைந்து நாக் அவுட் ஆகிறார். ஆனால், அந்த தினத்தை ஆலி மக்கி, தனது வாழ்வின் சிறந்த நாள் எனக் கூறுகிறார். அவர் ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதே கதை. பின்லாந்து சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட படைப்பு.

மாலை 7.00 மணி | SWEET DREAMS / FAI BEI SOGNI | DIR: MARCO BELLOCCHIO | ITALY | 2016 | 134'

1969. 9 வயது சிறுவன் மேஸிமோவின் இளம்பருவம் சோகத்திலேயே கழிகிறது. தன்னுடைய தாயின் மர்ம மரணத்தால் அவன் துவண்டுபோகிறான். நாட்கள் பறந்தோடுகின்றன. 90-களில் இளைஞன் மேஸிமோ சிறந்த பத்திரிகையாளன் ஆகிறான். அவனின் பணியால் சில மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. இரக்கம் மிகுந்த மருத்துவரான எலிசா அவனின் சிறு வயது காயங்களை தீர்க்க முயற்சிக்கிறாள்..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x