Last Updated : 16 Sep, 2016 05:52 PM

 

Published : 16 Sep 2016 05:52 PM
Last Updated : 16 Sep 2016 05:52 PM

ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

'தில்லுக்கு துட்டு' இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ப்ரூஸ்லீ' மற்றும் 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம், சசி இயக்கும் படம், 'அடங்காதே' உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இப்படங்களைத் தொடர்ந்து ராம்பாலா இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ராம்பாலா.

இப்படத்தை ஸ்டீபன் தயாரிக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x