Published : 05 Jan 2016 10:03 AM
Last Updated : 05 Jan 2016 10:03 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஷால் மற்றும் இலங்கையை சேர்ந்த ஆபர் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன் நிவாரண பொருள்கள் வழங்கினர்.

சிதம்பரம் அருகே உள்ள மேலகுண்டலபாடி, கூத்தன் கோவில், ஜெயங்கொண்ட பட்டினம், சாலியந்தோப்பு, விளாகம் ஆகிய கிராமங்களில் திரைப்பட நடிகர் சங்கம் மற்றும் இலங்கையை சேர்ந்த ஆபர் தொண்டு நிறுவனம் இணைந்து நிவாரண பொருள்களை வழங்கின. நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன் ஆகிய இருவரும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

1,250 குடும்பங்களுக்கு..

ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தன குமார், புவனேஸ்வரி மணிவண்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மொத்தம் 1,250 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

நிவாரண பொருள்களை வழங் கிய பின்னர் நடிகர் விஷால் கூறும்போது, “நான் இங்கு ஒரு சாதாரண மனிதனாக வந்துள்ளேன். நடிகராக அல்ல. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். ஒவ்வொருவரும் ஒரு நபருக்கு உதவி செய்தாலே இந்த பாதிப்பில் இருந்து எளிதாக மீண்டு விடலாம். ஆபர் தொண்டு நிறுவனமும் உதவி செய்து வருகின்றது. வெள்ளத்தால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தி பழைய வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும். தொண்டு நிறுவனம் மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x