Last Updated : 29 Apr, 2017 04:26 PM

 

Published : 29 Apr 2017 04:26 PM
Last Updated : 29 Apr 2017 04:26 PM

பாகுபலி 2-க்கு பெரும் வரவேற்பு: இந்திய திரையுலகினர் படக்குழுவினருக்கு வாழ்த்து

'பாகுபலி 2' படத்துக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பு குறித்து, இந்திய திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2'.

இந்திய திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் 'பாகுபலி 2' பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கும் இயக்குநர் ராஜமெளலிக்கும் தங்களுடைய வாழ்த்துகளை சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்கள். பிரபலங்களின் சில சமூகவலைத்தள கருத்துகள்:

மகேஷ்பாபு: கதை சொல்வதில் ஆசான் ராஜமவுலி மீண்டும் திரையில். பாகுபலி 2 ஒரு நிகழ்வு. நமது எதிர்பார்ப்புகளை தாண்டியுள்ளது. பிரம்மிக்க வைக்கும் படம். சினிமா சூழலையே மாற்றக்கூடியது. ராஜமவுலி மற்றும் மொத்த குழுவுக்கும் தலை வணங்குகிறேன்.

ராதிகா சரத்குமார்: ராஜமவுலி, உங்களுக்கும், உங்கள் குழுவுக்கும் வணக்கங்கள். உங்களது இந்த அற்புதமான படைப்பைப் பற்றி கூற வார்த்தைகளே இல்லை. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா என அனைவரும் அருமை. உலக சினிமாவுக்கு ஈடாக இந்திய சினிமாவின் தரம் உயர்வது பெருமையளிக்கிறது. அனுஷ்கா ஷெட்டியை மறக்க முடியாது. அழகான, அட்டகாசமான ராணியாக நடித்திருந்தீர்கள்.

தனுஷ்: ராஜமவுலி சார். தலைசிறந்த படைப்பு. இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை. மிகச்சிறப்பான எழுத்து. விதிகளை உடைத்து, அனைத்தையும் மறுவரையறைத்துள்ளீர்கள். அனைத்தையும். பிரபாஸ், இவ்வளவு ஈர்ப்பான முகத்தை பார்த்ததேயில்லை. அப்பாவித்தனமாக, அதே சமையம் உக்கிரமான முகம். உங்களது கடின உழைப்பின் முன் சிறுமையாக உணர்கிறேன். வாழ்த்துகள். பாகுபலி 2 எப்படி ஒரு அற்புத அனுபவமாக இருந்தது என்பதை எளிதாக சொல்ல வழியில்லை. வாயடைத்து போனேன். மொத்த குழுவுக்கும் என் வணக்கங்கள். தயவு செய்து திரையரங்கில் பாருங்கள்.

சிவகார்த்திகேயன்: மேம்பட்ட இந்திய சினிமாவுக்கான கனவுகளின், நம்பிக்கையின் தொடக்கம் பாகுபலி 2. ராஜமவுலி அவர்களுக்கும், அவரது குழுவுக்கும் பெரிய வணக்கங்கள். பிரபாஸ், சத்யராஜ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா, தமன்னா, நாசர் என அனைவரும் இனி நினைவிலிருந்து நீங்க மாட்டார்கள்.

ஒளிப்பதிவாளர் திரு: பாகுபலி 2 - தீவிரமான மற்றும் உணர்ச்சிகள் கலந்த போர் திரைப்படம். ராஜமவுலி அவர்கள் அற்புதமாக கதைசொல்லியிருக்கிறார். சாபு சிரில் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரின் சிறந்த உழைப்பு. இந்திய சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றுள்ள ராஜமவுலி அவர்களுக்கும், பிரபாஸ் மற்றும் மொத்த பாகுபலி 2 குழுவுக்கும் வாழ்த்துகள்.

ஜுனியர் என்.டி.ஆர்: இந்திய சினிமாவின் மிக நேர்த்தியான சித்திரம் பாகுபலி 2. தெலுங்கு சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே வேறொரு தளத்துக்கு ராஜமவுலி கொண்டு சென்றுள்ளார். தலை வணங்குகிறேன். ராஜமவுலியின் கனவுக்கு சிறப்பான நடிப்பின் மூலம் ஆதரவு தந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் அனைவருக்கும் வாழ்த்துகள். இதை தயாரித்த ஷோபு மற்றும் பிரசாத், மற்ற அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என ராஜமவுலியின் கனவை நனவாக்க உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். மரகதமணி அவர்கள் பாகுபலி 2-ன் ஒவ்வொரு காட்சிக்கும் தனது இசையின் மூலம் ஜீவன் தந்துள்ளார். பாகுபலி 2 பெரிய திரையில் மட்டுமே பார்த்து ரசிக்க வேண்டிய படம். இந்த பிரம்மாண்டத்தை கள்ளத்தனமாக பார்த்து அவமதிக்காதீர்கள்.

இயக்குநர் லிங்குசாமி: ஷோபு, ராஜமவுலி மற்றும் குழுவிடமிருந்து ஒப்பற்ற படைப்பு பாகுபலி 2. அனைத்து விதங்களிலும் முத்திரை பதித்துள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த்: #Bahubali2 @ssrajamouli sir !!!!! You are something else !!!! Don't miss it guys

ஆர்.ஜே.பாலாஜி: பாகுபலி 2 இதுவரை வந்த இந்திய திரைப்படங்களிலேயே ஒரு அற்புதமான திரை அனுபவம். ’இதை டவுன்லோட் பண்ணி பார்த்தா கம்ப்யூட்டரே காறி துப்பும்’. சிறந்த இந்திய சினிமாவ நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கப் போகும் ஒரு படத்தைப் பார்த்துவிட்டேன். பாகுபலி என்ற இந்த காவியத்தை படைத்த ராஜமவுலி மற்றும் குழுவுக்கு தலை வணங்குகிறேன்

ரகுல் ப்ரீத் சிங்: பாகுபலி 2 என்ற மாயத்தால் தாக்கப்பட்டேன். இது ஒரு படமல்ல. ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும், நடிப்பிலும் புல்லரிக்க வைக்கும் ஒரு அனுபவம். தெலுங்கு சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே உலக அளவில் பேசவைத்த ராஜமவுலி அவர்களுக்கு நன்றி. ஒவ்வொரு காட்சியிலும் 5 வருட கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தெரிகிறது. எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி சென்றுவிட்டது படம். வேறென்ன சொல்ல.

லட்சுமி மஞ்சு:பாகுபலி 2 பார்த்து வாயடைத்து போய்விட்டேன். ஒட்டுமொத்த குழுவுக்கும், ஆதரித்த அவர்கள் குடும்பத்துக்கும், தலை வணங்குகிறே. ராஜமவுலி கடவுள் தான். மயங்கிவிட்டேன். பிரம்மித்தேன்.

இயக்குநர் சுசீந்திரன்: ஒரு தமிழனாய் பொறாமைபடுகிறேன். ஒரு இந்தியனாய் பெருமைப்படுகிறேன் 'பாகுபலி 2'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x