Last Updated : 05 Jul, 2016 02:45 PM

 

Published : 05 Jul 2016 02:45 PM
Last Updated : 05 Jul 2016 02:45 PM

முத்தையா இயக்கத்தில் சூர்யா?- தயாரிப்பு தரப்பு விளக்கம்

முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகளுக்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க, முத்தையா இயக்கத்தில் வெளியான படம் 'மருது'. இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தை அன்புச்செழியன் தயாரித்திருந்தார். இப்படத்துக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இப்படத்தைத் தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் முத்தையா. இதற்காக அலுவலகம் எல்லாம் போட்டு கதை எழுதி வருகிறார்.

இந்நிலையில், அடுத்து முத்தையா இயக்கும் படத்தில் சூர்யா தான் நாயகன் என்று செய்திகள் வெளியானது. இது குறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் விசாரித்த போது, "எங்களது நிறுவனத்துக்கு படம் இயக்குவதற்காக கதை எழுதி வருகிறார் முத்தையா.

அந்தக் கதையை எழுதி முடித்தவுடன் தான் யார் நாயகன் என்பது முடிவாகும். அப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறாரா என்பது எல்லாம் இப்போது சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x