

சில சமயங்களில் - சில துளிகள்
ஜன.11 - மாலை 4.00 மணி | ரஷ்ய கலாச்சார மையம் | SILA SAMAYANGALIL | DIR: PRIYADARSHAN | TAMIL | 2016 | 102'
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'சில சமயங்களில்'.
பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் ரத்தப் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள். நமக்கு எய்ட்ஸ் இருக்குமோ என பயப்படுகிறார்கள். அந்தப் பதற்றம், பயம் ஆகியவற்றை ப்ரியதர்ஷன் தன் பார்வையில் படமாக்கியுள்ளார்.
நமக்கு சர்க்கரை வியாதிக்கு ரத்த பரிசோதனை செய்தாலே, அதன் முடிவு வரும்வரை பயத்தோடு இருப்போம். எய்ட்ஸ் பரிசோதனை முடிவு என்றால் எந்தளவுக்கு பயப்படுவோமோ அதை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பல நல்ல கருத்துகள் அடங்கிய இப்படத்தில் நடித்ததற்காக பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் சம்பளம் பெறவில்லை. மேலும், இப்படம் கோல்டன் க்ளோப் படவிழா போட்டியில் இறுதிவரைச் சென்றது.
*****
கர்மா: இயக்குநரின் குரல்
ஜன.11 - மாலை 6.30 மணி | ரஷ்ய கலாச்சார மையம்
ARMA | DIR: R.ARAVIND | TAMIL | 2016 | 72'
"கடந்த 15 ஆண்டுகளாக விளம்பரத்துறையில் ஒரு காப்பி ரைட்டராகவும் இயக்குநராகவும் தீவிரமாக இயங்கிவருகிறேன். சிறந்த விளம்பரங்களை உருவாக்கியதற்காக நூற்றுக்கும் அதிகமானமுறை விருதுபெற்றிருக்கிறேன். திரைப்படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு.
'கர்மா' நான் தயாரித்து இயக்கியிருக்கும் முதல் படம். ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மேட்ரிட்டில் சமீபத்தில் நடந்த சர்வதேசப் படவிழாவில் உலகத் திரைப்படங்களில் சிறந்த இயக்குநருக்கான விருதில் தகுதி பெற்றது. தவிர ஹாலிவுட் ஸ்கை பிலிம் பெஸ்டிவலிலும் சிறந்த திரைப்படத்துக்கான தகுதி பெற்றது."
- இயக்குநர் அரவிந்த்