Last Updated : 21 Jun, 2016 03:26 PM

 

Published : 21 Jun 2016 03:26 PM
Last Updated : 21 Jun 2016 03:26 PM

நெஞ்சம் மறப்பதில்லை பர்ஸ்ட் லுக் வெளியீடு

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.

'கான்' படம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை துவங்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்து வந்தார்கள்.

ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் முதல் பேய் படம் இது. இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து செல்வராகவனுடன் இசைக்கூட்டணி அமைத்திருக்கிறார் யுவன். இப்படத்தை கெளதம் மேனன் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

"இப்படத்தின் அனைத்து பாடல்களும் முடிவடைந்துவிட்டன. படத்தின் தீம் மியூசிக் மட்டுமே பாக்கியிருக்கிறது" என்று படத்தின் இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x