Last Updated : 05 Nov, 2013 01:20 PM

 

Published : 05 Nov 2013 01:20 PM
Last Updated : 05 Nov 2013 01:20 PM

நவம்பர் மாத இறுதியில் வீரம்!

'ஆரம்பம்' படத்தின் விளம்பர பாணியிலேயே தங்கள் 'வீரம்' படத்தினையும் விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

அஜித், தமன்னா, சந்தானம், விதார்த், ரமேஷ் கண்ணா, அபிநயா மற்றும் பலர் நடிக்க, 'சிறுத்தை' சிவா இயக்கி வரும் படம் 'வீரம்'. இப்படத்தினை விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் போதே பொங்கல் 2014ல் வெளியீடு என்று கூறிவிட்டார்கள்.

தற்போது 'ஆரம்பம்' படம் மக்களிடையே வரவேற்பை பெற்றிருப்பது மட்டுமன்றி வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. எனவே அப்படத்தைப் போலவே இப்படத்தினையும் விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அஜித் பிறந்த நாளன்று 'ஆரம்பம்' டீஸர் வெளியானது. அப்படத்தைப் பற்றி முதலில் வெளியானது டீஸர் தான். அதற்கு முன்னர் படத்திலிருந்து ஒரு புகைப்படத்தைக் கூட அவர்கள் வெளியிடவில்லை. அது போலவே நவம்பர் மாத இறுதியில் 'வீரம்' படத்தின் FIRST LOOK டீஸரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நவம்பரில் டீஸர், டிசம்பர் முதல் வாரத்தில் பாடல் வெளியீடு, டிசம்பர் மாதம் முழுவதும் விளம்பரப்படுத்துதல், ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியீடு என்று திட்டமிட்டு இருக்கிறது 'வீரம்' படக்குழு.

'ஆரம்பம்' ஒடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளில் அப்படத்துடன் இணைத்து 'வீரம்' டீஸர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x