Last Updated : 08 Jan, 2017 12:47 PM

 

Published : 08 Jan 2017 12:47 PM
Last Updated : 08 Jan 2017 12:47 PM

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தயாராகும் அணிகள்: குற்றச்சாட்டுகள் கூறும் ரித்தீஷ் ஆதாரங்களை தர விஷால் அழைப்பு

நல்ல பணிகளுக்கு இடையூறு செய்வதா என ஆவேசம்

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், இதில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் மீது நடிகர் ஜே.கே.ரித்தீஷ் புகார் கூறியுள்ளார். ஆதாரத்துடன் கூறி னால், பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக விஷால் கூறியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக நின்று அந்த அணியின் வெற்றிக்காக களப்பணி யாற்றியவர் ரித்தீஷ். சமீபகாலமாக நடிகர் சங்க பொறுப்பாளர்களுக்கும் இவருக்கும் மனக்கசப்புகள் அதி கரித்து வருகின்றன.

இந்த நிலையில், பிப்ரவரி 5-ம் தேதி நடக்கவுள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு குஷ்பு, செயலாளர் பதவிக்கு விஷால், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் போட்டி யிடுகின்றனர். எதிர் அணியில் தலைவர் பதவிக்கு முன்னாள் செய லாளர் ராதாகிருஷ்ணன், செய லாளர் பதவிக்கு சிவசக்தி பாண் டியன், மன்னன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக நின்ற ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்டவர்கள் இத்தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக ஆதரவு திரட்டுகிறார்கள்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ரித்தீஷ் கூறியதாவது:

‘போட்டி என்பது தேர்தலோடு முடிந்துவிட்டது. இனிமேல் சங்க உறுப்பினர்கள் எல்லோருமே அண்ணன் தம்பிகள்தான்’ என்றார்கள். ஆனால், அதன்படி சங்கம் நடந்து கொள்ளவில்லை.

சென்னையில் உள்ள துணை நடிகர்கள் ஏஜென்ட்கள் (ஏஆர்ஓ) 20 பேரில் சங்கையா என்பவர் மட்டும் தொடக்கத்தில் விஷால் பக்கம் இருந்தார். நாங்கள் வாக்கு சேகரித்த முறையில் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, மேலும் 12 ஏஜென்ட்கள் ராதாரவி பிடியில் இருந்து விஷால் பக்கம் வந்தனர். சங்கையா இப்போது சங்கத்தில் இல்லை. காரணம் கேட்டதற்கு, ‘எதற்கெடுத்தாலும் அவர் எதிர்த்துப் பேசுகிறார்’ என்று பதில் வருகிறது.

இதேபோல, சென்னையைச் சேர்ந்த துணை நடிகர்கள் 23 பேர் சங்கையாவுடன் தொடர்பில் இருப்ப தாக சொல்லி அவர்களையும் தற்காலிகமாக நீக்கியுள்ளனர். ‘அன் றாட கூலிகளான துணை நடிகர்களை இப்படி பழிவாங்காதீர்கள்’ என்று சங்கத் தலைவர் நாசரிடம் கூறி னேன். ‘அவர்களை மன்னிப்புக் கடிதம் தரச்சொல்லுங்கள் மீண்டும் சேர்த்துவிடலாம்’ என்றார். அதன் படியே கடிதம் கொடுத்தபிறகு, அவர்களை நிரந்தரமாக நீக்க நோட்டீஸ் கொடுக்கிறார்கள். இந்த நடவடிக்கைக்கு எதிராக நான்தான் வழக்கறிஞர் ஏற்பாடு செய்து கொடுத்து 23 பேரையும் நீதிமன்றத்துக்கு போக வைத்தேன்.

இதற்குப் பிறகு சங்க பதிவேடுகளை பார்த்தபோது இன்னும் சில தவறுகள் கண்ணில்பட்டது. நாமக்கல் நாடக நடிகர்களில் 20 பேர் மட்டும் விஷால் அணிக்கு வாக்களித்தனர். ராதாரவியின் பக்கம் நின்ற 110 பேரையும் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.

இப்போது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் குஷ்புவை தலைவருக்கு முன்னிறுத்தி இங்கேயும் செயலாளர் பதவிக்கு வர விஷால் காய் நகர்த்துகிறார். இவரோடு கூட்டாக இன்னொரு செயலாளர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.ஆர்.பிரபு நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியின் மாமா. நடிகர் சங்கம்போல, தயாரிப்பாளர் சங்கத்திலும் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்கள். இதை எளிதில் கைப்பற்ற முடியாது. இத்தேர் தலில் விஷால் அணியை தோற் கடிப்போம்.

இவ்வாறு ரித்தீஷ் கூறினார்.

இதுகுறித்து நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷாலிடம் கேட்டபோது, ‘‘நடிகர் சங்கம் மீது இதற்கு முன்பும் ஊழல் குற்றச்சாட்டை ஒருசிலர் முன்வைத்தனர். ஆனால், யாரும் அதை நிரூபிக்கவில்லை. திரைப்பட சங்கங்கள் வாயிலாக பல நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டி இருக்கின்றன. அதற்கே நேரம் கிடைக்காமல் இருக்கிறோம். எங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் வந்தால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். மற்றபடி, பணிக்கு இடையூறாக ஆளாளுக்கு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரம் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x