Last Updated : 25 Dec, 2013 12:31 PM

 

Published : 25 Dec 2013 12:31 PM
Last Updated : 25 Dec 2013 12:31 PM

ரஜினிக்கான கதையில் அஜித்?

கெளதம் மேனன் படத்தினைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் அஜித்.

'வீரம்' படத்தின் பணிகள் முடிவடைந்து அஜித் ஒய்விற்காக ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார். பொங்கல் முடிந்து தான் சென்னை திரும்ப இருக்கிறாராம்.

சென்னை திரும்பியவுடன், கெளதம் மேனன் இயக்கவிருக்கும் படத்திற்காக தனது உடலமைப்பை மாற்ற முடிவு செய்து இருக்கிறார் அஜித்.

இதுவரை தான் நடித்த படங்களில் இல்லாத அளவிற்கு, கெட்டப்பை மாற்ற திட்டமாம். பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கெளதம் மேனன் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் அஜித். எப்போதுமே ஒரு படம் முடிவடையும் தருவாயில் இருக்கும் போது தான் அஜித் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்.

தற்போது தனுஷ் நடிக்க 'அநேகன்' படத்தை இயக்கிவரும் கே.வி.ஆனந்த், அப்படத்தைத் தொடர்ந்து அஜித்தை இயக்கவிருக்கிறார். ரஜினிக்காக கே.வி.ஆனந்த் தயார் செய்த கதையை அஜித்திடம் சொல்ல, அஜித் 'நன்றாக இருக்கிறது. கால்ஷீட் ரெடி' என்று கூறிவிட்டாராம். ரஜினிக்கான வேடத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

கெளதம் மேனன் படம் முடிவடையும் தருவாயில், கே.வி.ஆனந்த் படம் பற்றிய அறிவிப்பை அஜித் வெளிடுவார் என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x