Published : 06 Jan 2017 04:58 PM
Last Updated : 06 Jan 2017 04:58 PM

சென்னை திரைப்பட விழா: ஜன.7-ல் என்ன படம் பார்க்கலாம்?

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை (ஜன.7) கண்டு ரசிக்கத்தக்க படங்கள் - சில பரிந்துரைகள்:

ஐனாக்ஸ் 2 | காலை 10.00 மணி | INVISIBLE / INVISIBLE | DIR: DIMITRI ATHANITIS | GREECE |2016 | 84'

தான் வேலை செய்யும் தொழிற்சாலையிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் ஆரிஸ் அதிர்ச்சியடைகிறான். மீண்டும் பணியில் சேர செய்யும் முயற்சிகள் வீணாக, கோபத்தில் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ள முடிவு செய்கிறான். ஆரிஸின் முன்னாள் மனைவி, அவர்களின் 6 வயது மகனை ஆரிஸிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லும்போது ஆரிஸின் முடிவு தீர்மானமாகிறது.

பெலாஸோ | பகல் 12,00 மணி | APPRENTICE / TU XING | DIR: BOO JUNFENG | SINGAPORE | 2016 | 115'

அய்மன் 28 வயதான சிறை அதிகாரி. சமீபத்தில் பணி இடமாற்றம் செய்யப்பட்டவன். பல வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய பெற்றோரை இழந்தவன். அவருடன் மூத்த சகோதரியான சுகைலா உடன் உள்ளான். அவனுடைய புதிய பணியிடத்தில் தனது சகப் பணியாளரான குன்னி தலைமைப் பண்பினால் ஈர்க்கபடுகிறான். தொலைவிலிருந்துக் கொண்டே குன்னின் நடவடிக்கையை பின்பற்ற தொடங்குகிறான் அய்மன். குன் அந்தச் சிறைச்சாலையில் மரண தண்டனையை நிறைவேற்றுபவராக உள்ளவர். குன்னும், அய்மன்னின் அறிவுகூர்மை மற்றும் விடாமுயற்சியை கவனித்து வருகிறார். இவ்விருவருக்கும் இடையே வழக்கத்துக்கு மாறான நட்பு உருவாகிறது. குன்னின் உதவியாளர் திடீரென தனது பணியை ராஜினாமா செய்ய அதிகாரமிக்க குன் தனது உதவியாளரான அய்மன் கொண்டுவர திட்டம் வகுக்கிறார். இதன் தொடர்ச்சியாக அய்மன் தனது மோசமான கடந்த காலங்களை தாண்டி எப்படி மரண தண்டனை நிறைவேற்றுபவராக மாறுகிறான் என்பதே இப்படத்தின் கதை.

கேஸினோ | மாலை 4.40 மணி | THE STOP OVER | DIR: DELPHINE COULIN MURIEL COULIN | FRANCE | 2016 | 102'

ஆப்கானிஸ்தானில் போர்க்களத்தில் பணியாற்றி இரண்டு இளம் ராணுவ வீரங்கானைகள் அரோரா, மரைன். இவர்களின் பனிச்சுமையை குறைக்கும் வகையில் இருவருக்கும் 3 நாள் விடுப்பு அளிக்கப்படுகிறது. இருவரும் சைப்ரஸ் நாட்டுக்குச் செல்கின்றனர். அங்கு சுற்றலாப் பயணிகள் தங்கும் பிரபல விடுதியில் தங்குகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் குதூகலம் தங்களைச் சூழ்ந்திருந்தாலும் அவர்களால் போரின் கோர முகத்தை மறக்க முடியவில்லை.

பெலாஸோ | மாலை 7.00 மணி | SON OF SAUL / SAUL FIA | DIR: László Nemes | Hungary | 2015 | 88'

ஆஸ்விட்ச்சில் நாஜிக்களின் கைதிகள் முகாமில் இருக்கும் ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த கைதி சால் ஆஸ்லாண்டர். அங்கு சித்திரவதையில் இறந்து போகும் கைதிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளான். ஒருநாள் இறந்து போன கைதிகளில் தனது மகன் என நினைக்கும் சிறுவனின் உடலைப் பார்க்கிறான். அந்த சிறுவனின் உடலை சில காரணங்களுக்காக பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால், அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி தான் நன்றாக பார்த்துக் கொள்ள தவறிய மகனின் உடலை எப்படியாவது தனது மத நம்பிக்கையின்படி முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என நினைக்கிறான் சால்.

ஆர்கேவி ஸ்டூடியோ | பிற்பகல் 2.30 மணி | ALL OF A SUDDEN | AUF EINMAL | DIR: ASLI OZGE | GERMANY, NETHERLANDS, FRANCE | 2016 | 112'

காஸ்டன் பிளாட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு அன்னாவைத் தவிர, எல்லோரும் வீடு திரும்பி விடுகின்றனர். காஸ்டன் அந்த இளம்பெண்ணின்மீது ஏதோ ஒரு மர்மமான ஈர்ப்பை உணர்கிறான். ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியாக ஒரு பலவீனமான தருணம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. ஜெர்மனியில் ஒரு சிறிய நகரத்தில் சிறப்பாக வசித்து வந்த கார்ஸ்டன் மெல்ல தனது கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்குகிறான். அவனது பதற்றமான மனநிலையை அவனது நண்பர்கள், குடும்பம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். புதிய வாழ்க்கை சார்ந்த அவனது முயற்சிகளோ கடும் தோல்வியில் முடிகிறது. ஏமாற்றம், ஆத்திரம், அநீதி, பேரிடர் என எல்லாமும் அவனை புதிய கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கிறது. மீண்டும் புதிய மனிதனாக மாறத் தொடங்குகிறான்.

ஐனாக்ஸ் 2 | பிற்பகல் 2.30 மணி | WANDERING / THUDONGKAWAT | DIR: BOONSONG NAKPHOO | TAILAND | 2013 |125'

மனைவி, மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாபின் வாழ்க்கை, அவன் மகன் இறந்து மனைவி பிரிந்ததும் மொத்தமாக மாறுகிறது. அவனது கிராமத்து மக்களும் அவனை ஒதுக்க, தனிமையில் விரக்தியடைகிறான். தன்னால் இந்த நிலையிலிருந்து மீள முடியாத என நினைக்கும் போது, ஒரு பவுத்த துறவியின் வடிவில் நம்பிக்கை பிறக்கிறது. அவர், நாபை புத்த துறவியாக மாறச் சொல்கிறார்.

பெலாஸோ | பிற்பகல் 2.30 மணி | THE STUDENT / (M)UCHENIK | DIR: KIRILL SEREBRENNIKOV | 2016 | 118'

சமகால ரஷ்யா, ஒரு ஹைஸ்கூல் மாணவன் உலகம் தீய சக்திகளிடமிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது என்று நம்புகிறான். அவனைச் சுற்றிலுள்ள வயதுவந்த மாணவர்களின் ஒழுக்கம், நம்பிக்கைகள் சவாலாக ஆரம்பிக்கிறது. எல்லோரிடமும் முரண்படுகிறான். கண்ணெதிரே உள்ள வாழ்க்கையை நம்பாமல் தான் கொண்டுள்ள ஒழுக்கம் சார்ந்த அறநெறியை மனதில்கொண்டு நடக்கிறான். அதனால் பலரின் வெறுப்பை அவன் சம்பாதிக்கவேண்டியிருந்தது. யதார்த்த உலகம் அவனை என்ன செய்தது? திரைப்படம் தத்துவார்த்த, யதார்த்த, தனிமனித தூய்மை, கூட்டுமனோபாவம் ஆகியவற்றிக்கிடையே உள்ள வேறுபாட்டை பள்ளிமாணவர்களைக்கொண்டு ஆராய்கிறது.

ஐனாக்ஸ் 2 | மாலை 4,30 மணி | ON THE OTHER SIDE | S ONE STRANE | DIR: ZRINKO OGRESTA | CROATIA | 2016 | 85'

20 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்னா தனது குடும்பத்தை ஜாக்ரெபிற்கு மாற்றுகிறாள். அதாவது இவர்கள் வாழ்க்கையை ஏறக்குறைய சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் சம்பவங்களிலிருந்து குடும்பத்தை நகர்த்திச் செல்கிறாள் வெஸ்னா. எனினும் எதிர்பாராத அழைப்பு ஒன்று அவள் இத்தனையாண்டுகளாக படாதபாடுபட்டு மறைத்த ரகசியத்தை மீண்டும் கொண்டு வருகிறது.

ஐகான்ஸ் 2 | காலை 12,15 மணி | THE MINE / JATTILANEN | DIR: ALEKSI SALMENPERA | FINLAND | 2016 | 93'

பின்லாந்து நாட்டின் பிரபலமான சுரங்க நிறுவனமான தல்விவாராவின் கனவு திட்டமாக இருக்கிறது நிக்கல் சுரங்கம். அந்த நிறுவனத்தில் ஜஸ்ஸிக்கு வேலை கிடைக்கிறது. சுரங்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறுவதற்கான பணியில் அவர் ஈடுபடுகிறார். அப்போதுதான் ஜஸ்ஸிக்கு பல உண்மைகள் தெரிய வருகின்றன. தல்விவாரா சுரங்க நிறுவனம் நிக்கல் வெட்டி எடுக்க அனுமதி பெற்றுவிட்டால் அருகாமையில் இருக்கும் உள்ளூர் நீராதாரங்கள் வெகுவாக பாதிக்கப்படும் எனத் தெரிந்து கொள்கிறார். இதை நிறுவனத்திடம் தெரிவிக்கிறார். ஆனால், அதை கண்டும் காணாமல் இருக்குமாறு நிறுவனம் கூறுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் ஜஸ்ஸியின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தல்விவாரா சுரங்கத் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது என்னவென்பதே படத்தின் கதை.

பெலாஸோ | மாலை 4.40 மணி | HEDI | iNHEBEK HEDI | DIR: MOHAMED BEN ATTIA | TUNISIA | 2016 | 88'

ஹெடி பெரிய எளிமையானவன். சுற்றியிருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு அதன் படி வாழ்பவன். வாழ்க்கையில் அதிகம் எதிர்பார்க்காதவன். ஹெடிக்கு பெண் பார்த்து முடிவு செய்கிறாள் அவன் தாய். திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக மஹ்தியா செல்கிறான். அங்கு ரைம் என்பவளை சந்திக்கிறான் ஹெடி. இருவரும் காதலிக்க ஆரம்பிக்க, ஹெடி தானாக ஒரு முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x