Published : 01 Apr 2017 03:24 PM
Last Updated : 01 Apr 2017 03:24 PM

கிருத்திகா உதயநிதி - விஜய் ஆண்டனி இணையும் காளி

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு 'காளி' என தலைப்பிட்டுள்ளார்கள்.

'எமன்' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் தயாரிக்கும் 'அண்ணாதுரை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆண்டனி. புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கவுள்ளார். இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

'அண்ணாதுரை' படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. மேலும், தன்னுடைய விஜய் ஆண்டனி பிலிம் கர்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளார்.

'காளி' என்று இப்படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். 'வணக்கம் சென்னை' படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள 2வது படமாக 'காளி' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x