Last Updated : 10 Feb, 2017 05:31 PM

 

Published : 10 Feb 2017 05:31 PM
Last Updated : 10 Feb 2017 05:31 PM

துருவ நட்சத்திரம் அப்டேட்: அனு இம்மானுவேல் விலகல்; ரீது வர்மா ஒப்பந்தம்

'துருவ நட்சத்திரம்' படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அனு இம்மானுவேல் விலக, தற்போது ரீது வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குன்னூரில் தொடங்கி நடைபெற்றது. விக்ரமை மட்டும் வைத்து சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.

இப்படத்துக்கு இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அனு இம்மானுவேல் கால்ஷீட் தேதிகள் பிரச்சினை காரணமாக விலகிவிட்டார். அவருக்கு பதிலாக 'பெல்லி சூப்புலு' பட நாயகியான ரீது வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.

இப்படத்தை கவுதம் மேனனின் 'ஒன்றாக என்டர்டையின்மென்ட்' நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவிருக்கிறது.

'பெல்லி சூப்புலு' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கவுதம் மேனன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x