Last Updated : 26 Nov, 2013 04:10 PM

 

Published : 26 Nov 2013 04:10 PM
Last Updated : 26 Nov 2013 04:10 PM

சின்ன பட்ஜெட்டில் ஆக்‌ஷன் : செல்வராகவன்

சிறு பட்ஜெட்டில், ஆக்‌ஷன் படம் ஒன்றை அடுத்த படமாக இயக்கயிருப்பதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 'இரண்டாம் உலகம்'. பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்தது பி.வி.பி சினிமாஸ் நிறுவனம்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்களுள், அதிக பொருட்செலவில் தயாரான படம் 'இரண்டாம் உலகம்'. இப்படம், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், 'இரண்டாம் உலகம்' படத்தைத் தொடர்ந்து சிறு பட்ஜெட்டில் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார். குறுகிய காலகட்டத்தில், ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம் செல்வராகவன். தற்போது இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x