Last Updated : 04 Jan, 2016 12:56 PM

 

Published : 04 Jan 2016 12:56 PM
Last Updated : 04 Jan 2016 12:56 PM

வி.இசட். துரை இயக்கத்தில் அமீர் - ஆர்யா கூட்டணி

வி.இசட். துரை இயக்கவிருக்கும் புதிய படத்தில் இயக்குநர் அமீர் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'முகவரி', 'தொட்டி ஜெயா', 'நேபாளி', '6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி.இசட். துரை. இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான '6 மெழுகுவர்த்திகள்' படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் வி.இசட். துரை. பிரதானமாக இரண்டு நாயகர்கள் நடிக்கவிருக்கும் இக்கதையில் அமீர் மற்றும் ஆர்யா நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் சாம் டி.ராஜ். முழுமையான திரைக்கதை அமைக்கும் பணி முடிந்ததும், இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'மஞ்சப்பை' ராகவ் இயக்கும் படத்திலும், துரை இயக்கவிருக்கும் படத்திலும் மாறி மாறி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஆர்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x