Published : 08 Jan 2017 06:39 PM
Last Updated : 08 Jan 2017 06:39 PM

சென்னை பட விழா | ஐனாக்ஸ் 2 | ஜன.9 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை (ஜன.9) ஐனாக்ஸ் 2-ல் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.15 மணி | IN BETWEEN / BAR BAHR | DIR: MAYSALOUN HAMOUD | ISRAEL | 2016 |96'

இஸ்ரேலியப் பெண்கள் மூவர், தங்களை இஸ்ரேல் இனத்தவராகவோ, பாலஸ்தீனப் பெண்களாகவோ நினைக்காத நாட்டில் வாழ்கின்றனர். இசுலாமிய பாரம்பரியத்தைப் பின்பற்றாத இரண்டு சக அறைவாசிகளோடு மூன்றாவது பெண் வாழும் சூழல் உருவாகிறது. இதனால் அவர்களின் சம காலத்திய கலாச்சார குடும்ப வாழ்க்கையில் குழப்பம் விளைகிறது. இதனால் அவர்களுக்குள் என்ன சிக்கல்கள் நேர்கிறது என்பதை இயக்குநர் மேசலெளன் இன் பிட்வீன் படத்தின் மூலம் காட்சிப்படுத்துகிறார்.

*****

பகல் 12,15 மணி | HOLY BAIKER / REZA A LENDA | DIR: HOMERO OLIVETTO | BRAZEL | 2016 | 87'

வறண்ட மழையே காணாத பிரேசிலின் ஒரு பகுதி, இங்கு பைக் ஓட்டுநர்கள் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து மழையைப் பொழிய வைப்பதற்கான பேரதிசய நிகழ்வைத் தேடி தங்கள் நிலத்தைக் காப்பாற்ற போராடும் கதை.

*****

பிற்பகல் 2.30 மணி | LANTOURI / LANTOURI | DIR: REZA DORMISHIAN | IRAN | 2016 |115'

டெஹ்ரான் மாநகரின் வடக்கு மாவட்டப் பகுதியின் நிறைய பணக்கார குடும்பங்கள் சிதறக் காரணமான லாண்டரி எனும் பெயரில் அழைக்கப்படும் கும்பல் பட்டப்பகலிலேயே அப்பகுதிகளில் இயங்கிவருகிறது. மாநில நிதிமோசடிகளிலும் ஊழலிலும் சம்பாதித்த செல்வந்த குடும்பங்களின் குழந்தைகளை கடத்துவதிலும் பெயர்போனவர்கள். இத்தகைய கும்பல்களில் உள்ள ஒரு தனிப்பட்ட ஆளின் வாக்குமூலத்திலிருந்துதான் படம் தொடங்குகிறது. சமூகவியலாளர்கள், மனித உரிமை போராளிகள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளும் பேசுகிறார்கள். இளைஞர்கள் விரக்தி அடைந்த நிலையில் சமூகத்தின் குழப்பமான இந்நிலை உருவாகியுள்ளது என்பதும் இப்படத்தில் வெளிப்படுகிறது.

*****

மாலை 4,30 மணி | UNITED STATES OF LOVE | DIR: TOMASZ WASILEWSKI | POLAND | 2016 | 104'

போலந்து, 1990. போலந்தில் காற்று மாறி வீசத் தொடங்குகிறது. பரவசமிக்க விடுதலையான முதலாம் ஆண்டு, ஆனாலும் எதிர்காலம் பற்றிய எதையும் நிச்சயமாக சொல்லமுடியாது. வெளிப்படையான மகிழ்ச்சிமிக்க 4 பெண்கள் வெவ்வேறு வயதுடையவர்கள் தங்கள் வாழ்க்கை மாற்றத்திற்கான நேரத்தை தீர்மானிக்கிறார்கள். தங்கள் மகிழ்ச்சியைப் பெறுவதற்காகவும் ஆசைகளை பூர்த்திசெய்துகொள்வதற்காகவும் போராடுகிறார்கள். அகாதா ஒரு இளம்தாய், மகிழ்ச்சியற்ற திருமணத்தில் சிக்கிக் கொண்டவள், இன்னொருவனிடம் தஞ்சம் தேட அவர்களுக்கு உறவுக்கே வாய்ப்பில்லாமல் போகிறது. ரெனாடா ஒருமுன்னாள் ஆசிரியை அவள் தனது அண்டை வீட்டில் வசிக்கும் மார்ஸெனா முன்னாள் அழகு ராணியான அவருடன் நல்ல நட்பில் இருக்கிறாள். மெர்ஸேனாவின் சகோதரி இஸா ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை அவள் தன்னிடம் படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தையை காதல் புரிகிறாள்.

*****

இரவு 7.15 மணி | AFTER THE STORM | DIR: HIROKAZU KOREEDA | JAPAN | 2016 | 117'

புகழ்பெற்ற எழுத்தாளர் ரியோட்டா. தனக்குக் கிடைத்த பணத்தையெல்லாம் சூதாட்டம் மூலம் செலவழிக்கிறான். இதனால் அவனுடைய குடும்பத்துக்கு, அவனின் குழந்தைகளுக்கு நேரம் செலவிடுவதில்லை. ரியோட்டாவின் தந்தை மறைவுக்குப் பிறகு, அவனின் வயதான தாயும், அழகான முன்னாள் மனைவியும் தனியாகச் செல்கிறார்கள். நெடு நாட்கள் கழித்து புயல்வீசிய ஒரு கோடை இரவில், ரியோட்டாவுக்கும், குடும்பத்துக்கும் இடையில் உண்மையான பந்தம் மீள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x