Published : 04 Jan 2017 06:02 PM
Last Updated : 04 Jan 2017 06:02 PM

சென்னை திரைப்பட விழா | ஆர்.கே.வி | ஜன.5 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.5) ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | MORE THAN I CAN RECOGNIZE | DIR: ALLAN RIBEIRO | BRAZIL | 2016 | 82'

800 மீட்டர் சதுர பரப்பளவுக் கொண்ட அந்தத் தனிமையான கண்ணாடி அவருக்கு போதுமானதாக இல்லை. தன்னிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு துணையை தனது கலையில் அவர் கண்டறிக்கிறார். டேரலுக்கு படங்கள் இயக்குவதில் விருப்பம் இல்லை.

காலை 12.00 மணி | KON TIKI | DIR: JOACHIM RONNING & ESPEN SANDBERG | NORWAY | 2012 | 120'

1947-ல் ஓர் இளம் நார்வே சாதனையாளன் தோர் ஹையெர்தால் தன்னுடைய படகிலேயே பிசிபிக் பெருங்கடலை 4,300 கடல்மைல்கள் தூரம் கடந்தான். தோர் தன்னுடைய மனைவி மார்கியூஸ் உடன்கிழக்கில் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கிறான். அவ்வளவு தொலைவில் உள்ள தென்கடல் தீவுகளில் தென்அமெரிக்க பழங்குடியினர் வாழக்கூடும் என்று எண்ணுகிறான். இருந்தபோதிலும் நீரில் நீந்திச்செல்ல அவனுக்கிருந்த பயத்தால் தயங்கிவந்த தோர் பின்னர் எப்படியாவது தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கவேண்டுமென கடல் பயணத்தை மேற்கொள்கிறான். புயல் மழைக்கிடையில் அச்சம் தரும் சுறாக்களுக்கிடையே அந்தப் பயணமே பெரும் சாகசமாக அமைகிறது. 2013ல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மதியம் 2.30 மணி | POST TENEBRAS | DIR: CARLOS REYGADAS | USA | 2012 | 120'

இப்படம் விசித்திரமான கதையமைப்பைக் கொண்டுள்ளது. ஜான் மற்றும் அவன் மனைவி நடாலியா இருவருக்கும் இரு குழந்தைகள். நகர்ப்புற வாழ்க்கை ஏனோ சலித்துப்போக கிராமம் ஒன்றுக்கு சென்று சிலகாலம் வாழலாம் என முடிவு செய்கிறார்கள். அதன்படி மெக்ஸிகோ கிராமம் ஒன்றிற்கு வருகிறார்கள். கிராமத்து வீடு என்றாலும் ஆடம்பரமாக இருக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் கிராம வாழ்க்கையை அவர்கள் அனுபவிக்கிறார்கள். எனினும் இந்த வாழ்க்கை அவர்களது ரசனையிலேயே மாற்றம் கொண்டுவரத் தொடங்ககிறது. குழந்தைகளுக்கு முன்பு அனுபவித்த வாழ்க்கைக்கும் இங்கு அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களுக்கும் நிறைய வித்தியாசம் ஏற்படுகிறது. இங்கு தடையின்றி எங்கும் செல்லும் மகிழ்ச்சியை அவர்கள் காண்கிறார்கள்... அதேநேரம் ஏதோ ஒரு மர்மத்தையும் அவர்கள் காண நேரிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x