Published : 07 Jan 2017 05:05 PM
Last Updated : 07 Jan 2017 05:05 PM

சென்னை பட விழா | ஆர்.சி.சி. | ஜன.8 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.8) ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | BETWEEN VALLEYS / ENTRE VALES | DIR: PHILLIPPE BARCINSKI | BRAZIL | 2012 | 80'

வின்செண்ட் ஒரு தொழிலதிபர், கைரோவின் அப்பா, அர்பணிப்புடன் பணிபுரியும் பல் மருத்துவர் மரினாவை திருமணம் செய்துக் கொள்கிறார். இவ்வாறு ஒரு சாரசரி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த வின்செண்டின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கு எதிர்பாறாத சம்பவங்களள் அனைத்தையும் இழக்க செய்கிறது. அதனைத் தொடர்ந்து வின்செண்டின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. வின்செண்ட் என்ற பெயர் மாறுகிறது. குப்பை கிடங்கில் வாழத் தொடங்குகிறார். இவ்வாறு நொருங்கப்பட்ட நிலையில் மீண்டும் தனது அடையாளத்தை நிருபிக்கும் மனிதனின் பயணத்தை கூறுகிறது. எண்ட்ரே வாலெஸ்/பிட்வின் என்ற திரைபடம்.

காலை 11.30 மணி | ISHTI | DIR: G.PRABHA | SANSKRIT | 2016 | 108'

ஹிஷ்டி திரைப்படம் கேரளாவில் இருபதாம் நுற்றாண்டின் மையத்தில் பயணிக்கிறது. நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் தன்னுடைய பாரம்பரியமான குடும்பத்துக்கு சவால் விடுகிறார். அவரது குடும்பத்தில் ஆண் குழந்தைகள்தான் குடும்பத்தின் சொத்துகளை பராமரிப்பது வழக்கம். பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அப்பெண் கேள்வி எழுப்புகிறாள். பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை பற்றியும் இப்படம் பேசுகிறது

பிற்பகல் 2.00 | POSTMASTER | DIR: SRIJON BARDHAN | BENGALI | 2016 | 109'

உலகளாவிய அளவில் காதல் என்பது இயற்கையாக வாழ்க்கையில் மலரக்கூடியது. அதை யாராலும் கட்டுப்படுத்தவோ எல்லைகளை வரையறை செய்யவோ இயலாது. ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த நந்தாவிடம் அப்படியொரு விஷயமும் நெருங்கிவந்தது. நகர சந்தடியில் சலிப்பு ஏற்பட்டிருந்த நந்தாவுக்கு கிராமம் ஒன்றிற்கு போஸ்டர் மாஸ்டராக செல்லும் வேலை கிடைக்கிறது. கிராமத்துக்கு சென்றபிறகு தனிமையில் உழலும் நந்தாவுக்கு ஒரு ஆதரவற்ற பெண் ரத்னா வந்து வீட்டு வேலை செய்து உதவுவது சற்றே ஆறுதலைத் தருகிறது. நாளாக ஆக இருவருக்குள்ளும் ஒருவித நெருக்கமான உணர்வை உணர்கின்றனர். நந்தாவுக்கு ரத்னா மீது நேசம் படர்கிறது. இதை நந்தாவின் தந்தை ரகுப் சென் எதிர்க்கிறார். குடும்பத்தில் புது அதிர்வலைகளை இக்காதல் உண்டாக்குவதாக அவர் கருதுகிறார். இதனால் ரகுப் சென் கடுமையாக நோய்வாய்ப்பட நந்தா நகரத்திற்கு வரவழைக்கப்படுகிறான்.

மாலை 4.00 மணி| RUBAAI | DIR: ANBAZHAGAN | TAMIL | 2016 | 119'

மாலை 6.30 மணி | DHARMADHURAI | DIR: SEENU RAMASAMY | TAMIL | 2016 | 147'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x