Published : 12 Nov 2013 12:00 AM
Last Updated : 12 Nov 2013 12:00 AM

படிப்புக்கு குட்பை சொல்லிட்டேன் - ஒவியா பேட்டி

பேட்டி கொடுக்க பந்தா பண்ணும் ஹீரோயின்கள் மத்தியில், நினைத்த நேரத்தில் பேசக்கூடியவர் ஓவியா. உத்திரகாண்ட் மாநிலம் 'நைனிடால்' மலைப்பரப்பின் குளுகுளு பகுதியில் 'இருக்கு ஆனா இல்ல' படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஓவியாவிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று சொன்னதும் அங்கிருந்தே பேசத் தொடங்கினார். குளிர் பிரதேசத்தில் இருந்து பேசுவதால் அவரது குரலில் சற்று நடுக்கம்.

‘மதயானைக்கூட்டம்’ படத்திற்காக முதன்முறையா உங்க குரலிலேயே டப்பிங் கொடுத்திருக்கீங்களாமே?

ஆமாம். ரொம்பவே திரில்லான அனுபவம் அது. இந்தப்படத்தில் ஹோம்லியான மலையாளப் பெண்ணாக நடிக்கிறேன். தமிழ் கலந்த மலையாள பாஷை என்பதால் நானே பேசலாம் என்று முடிவெடுத்தேன். என்னோட குரல் நல்லா இருக்கான்னு ரசிகர்கள்தான் படம் பார்த்து சொல்லணும்.

மூன்று நாயகிகள் சப்ஜக்ட் படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கீங்களே?

புலிவால் படம் வெளியாகி என்னோட கேரக்டரைப் பார்த்தால் உங்களுக்கே நான் ஏன் இதற்கு ஒப்புக்கொண்டேன் என்பது புரியும். ஏற்கனவே மலையாளத்தில் வெளிவந்த படம். தமிழில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்று அழைப்பு வந்ததும் குறிப்பிட்ட கேரக்டர்தான் எனக்கு வேண்டும் என்று கேட்டே வாங்கிக்கிட்டேன். கிளாமர், ப்யூட்டி, ஸ்டைலிஷ் என்று ஈடுபாட்டோட நடித்த படம். ரொம்பவே புதுவிதமா இருக்கும்.

அனன்யா, இனியா, நீங்க இப்படி ஒரு ஊர்ப் பொண்ணுங்க எல்லாம் அந்தப்படத்தில் பேசி வைத்து ஆக்கிரமிச்சிட்டீங்க போல?

தமிழ்ப்படங்களில் நடிக்க அதிகமா தமிழ்ப்பொண்ணுங்க ஏன் வரமாட்டேங்குறாங்கன்னுதான் எனக்கும் புரியலை. அவங்களும் வரணும். ‘புலிவால்’ படத்தில் நான் பிரசன்னாவுக்கு ஜோடியா வர்றேன். படத்தோட பிரமோஷன் சமயத்தில்தான் அனன்யா, இனியாவை எல்லாம் பார்த்தேன். இரண்டு பேருமே என் தோழிகள். ஷூட்டிங்ல அவங்களோட சேர்ந்து வர்ற காட்சிங்க இல்லையேனு கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் எல்லோரும் ஒரே படத்துல இருக்கோம். அதுவும் சந்தோஷம்தானே.

‘மூடர்கூடம்’ படத்தில் சின்ன ரோலில் வந்திருப்பீங்க? கதைத் தேர்வுகளில் உங்களது நோக்கம் என்ன?

இயக்குநர் நவீன், நல்ல திறமைசாலி. புது டீம் நல்ல கதையோட படத்தை கொடுக்க உழைச்சாங்க. நம்மோட பங்களிப்பும் இருக்கட்டுமேன்னு ஏற்ற கதாபாத்திரம். நல்ல கதை, ஹிட் இயக்குநர் அல்லது பெரிய பேனர் இதில் எதாவது ஒரு விஷயம் எனக்கு மனசுக்குப்பட்டாதான், அந்தப்படத்தை ஒப்புக்கொள்வேன். இனி வரும் படங்களின் நடிப்பு அந்த விஷயத்தை பிரதிபலிக்கும்.

படிக்கப்போனீங்களே என்ன ஆச்சு?

முழுசா ஆறு மாதம்கூட தொடர முடியலை. மனசு முழுக்க நடிப்பு ஆசையை குவித்து வைத்துக்கொண்டு எப்படி, படிக்க முடியும். அதான், குட் பை சொல்லிட்டேன்.

கிளாமர் கேரக்டர் பக்கமும் காத்து வீசும்போல?

இந்த உடையில் மட்டும்தான் நடிப்பேன் என்று எந்த கட்டுப்பாடும் நடிப்பில் அவசியமில்லை. கதைகளின் கேரக்டராக வாழ்வதில்தான் என் விருப்பம்.

குடும்பம்?

அம்மா, அப்பா, ஒரே பொண்ணு. குட்டிக்குடும்பம். டாக்டரா, வக்கீலா, நடிகையா இப்படி எந்த எதிர்காலதிட்டமும் இல்லாம வளர்ந்த பொண்ணு. ஆரம்பத்தில் இருந்தே எதையும் கிரியேட்டிவிட்டியா செய்யணும் என்று மட்டும் தோணும். மாடலிங் துறை ஆர்வம், நடிப்பில் கொண்டு வந்துடுச்சு. அதேபோல, திக் பிரண்ட்ஸ் எல்லாம் எனக்கு இல்லை.

வெறும் 'ஹாய் , 'பை' நண்பர்கள்தான் அதிகம். வீட்டில் இருக்கும்போது பாட்டுக்கேப்பதும், பாட்டு பாடுவதும் ரொம்பவே பிடிக்கும். மங்காத்தா, ரம்மினு கார்ட்ஸ் விளையாட்டு என்றால் அவ்ளோ ஜாலியாயிடுவேன். வீட்டில் யார் கொஞ்சம் ஓய்வா இருந்தாலும் போதும் உடனே அவங்களை விளையாட்டுக்குள்ள இழுத்துட்டு வந்துடுவேன். மற்றபடி ஷூட்டிங்.. ஷூட்டிங்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x