Published : 08 Jan 2017 06:00 PM
Last Updated : 08 Jan 2017 06:00 PM

சென்னை திரைப்பட விழா | ஆர்சிசி | ஜன.9 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை (ஜன.9) ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | THEY WILL RETURN / ELES VOLTAM | DIR: MARCELO LORDELLO | BRAZIL | 2012 | 100'

கிரிஸ், வயது 12 மற்றும் அவளது அண்ணன் ஆகியோரை சாலையோரத்தில் பெற்றோர் விட்டுவிடுகிறார்கள். வெகு விரைவாக அதற்கான தண்டனை கிடைக்கிறது. ஆனால் அது மிகப் பெரிய சவாலாக அமைகிறது. அவள் வீட்டுக்குத் திரும்பும் வழியை கண்டுபிடிக்கிறாள். அந்தப் பயணத்தில் அவள் வித்தியாசமான உண்மைகளைக் காண்கிறாள். இன்றைய நவீன உலகத்தின் யதார்த்த வாழ்க்கையை காணும் கிரிஸ் எனும் சிறுமி தன்னைக் கண்டடைவதும் நிகழ்கிறது.

******

காலை 11.30 மணி PINKY BEAUTY PARLOUR | DIR: AKSHAY SINGH | HINDI | 2016 | 127'

பிங்க்கியும், புல்புல்லும் சகோதரிகள். பனாரஸில் இரு சகோதரிகளும் இணைந்து பியூட்டி பார்லர் நடத்துகிறார்கள். நிறம் இந்தச் சமூகத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது. சகோதரிகளின் உறவை எப்படி பாதிக்கிறது என்பதை இடையில் நடக்கும் கொலை சம்பவத்துடன் உணர்ச்சி கலந்த போராட்டமாக பயணிக்கிறது பிங்கி பியூட்டி பார்லர்

******

பிற்பகல் 2.00 | U-TURN | DIR: PAWAN KUMAR | KANNADA | 2016 | 121'

லூசியா பட இயக்குநரின் படம். போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒரு பத்திரிகையாளரான இளம் பெண் பயணிப்போர்களில் விதிகளை மீறுபவர்களைப் பற்றி பத்திரிகையில்எழு முயல்கிறாள். துரதிஷ்டவசமாக ஒரு கொலை வழக்கில் அவள் சிக்கிக்கொள்கிறாள். அவளுக்கு உதவ முற்படும் ஒரு காவலர் தன்னுடைய வீட்டைவிட்டுவெளியே நேரிடுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் கொலைவழக்கில் மறைந்துள்ள புதிய ரகசியங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

******

மாலை 4.00 மணி | URIYADI | DIR: VIJAY KUMAR B | TAMIL | 2016 | 87'

தமிழ் சினிமாவில் 'பொலிட்டிக்கல் த்ரில்லர்' என்பதே அரிது. இந்த வகையில் உருப்படியான படம் என்பது அரிதினும் அரிது. இந்த வெற்றிடத்தை தமிழ் சினிமா 2016-ல் கெத்தாக நிரப்பிய படைப்பு 'உறியடி'. புது முயற்சி, நம்பிக்கை நட்சத்திரம், சிறந்த முதல் படைப்பு முதலான பிரிவுகளில் சேர்த்து இப்படத்தை உருவாக்கியவர்களைக் கொண்டாடி, அவர்களை சற்றே குறைவாக எடைபோடுவது அபத்தம். மூத்த படைப்பாளிகளே தடுமாறும்போது இந்த இளம் அணி செமத்தியான படம் கொடுத்திருப்பதால் இவர்களை ஒரே தராசில்தான் வைத்துப் போற்றவேண்டும்.

******

மாலை 6.30 மணி | 24 | DIR: VIKRAM KUMAR | TAMIL | 2016 | 164'

காலம் ஒருவனின் காதலியாக மாறினால் என்ன நிகழும்? அதுதான் ‘24’. விஞ்ஞானி சேதுராமன் (சூர்யா) காலத்தினூடே பயணம் செய்ய உதவும் கைக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்கிறார். அதைக் கைப்பற்றத் துடிக்கும் ஆத்ரேயா (அண்ணன் சூர்யா), சேதுராமனையும் அவர் மனைவியையும் (நித்யா மேனன்) கொலை செய்கிறார். சேதுராமன் தன் குழந்தையையும் டைம் மிஷின் வாட்சையும் காப்பாற்றிவிடுகிறார். இது நடந்தது 26 ஆண்டுகளுக்கு முன்பு. கதை இப்போது நிகழ்காலத்துக்கு வருகிறது. சேதுராமனின் மகன் மணி (சூர்யா) வாட்ச் மெக்கானிக். அப்பா கண்டுபிடித்த டைம் மிஷின் வாட்ச் அவரிடம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அதன் பயன் என்ன என்பது அவருக்குத் தெரியவருகிறது.

26 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால் கோமாவில் படுத்துவிட்ட ஆத்ரேயா இப்போது விழித்து எழுகிறார். அந்த வாட்சைக் கைப்பற்றுவதில் அவரது வெறி இம்மியளவும் குறையவில்லை. ஆத்ரேயாவின் பணபலத்துக்கும் மிருக வெறிக்கும் இளம் சூர்யாவால் ஈடுகொடுக்க முடிந்ததா என்பதே கதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x