Last Updated : 02 Jul, 2016 03:42 PM

 

Published : 02 Jul 2016 03:42 PM
Last Updated : 02 Jul 2016 03:42 PM

சண்டக்கோழி 2 அப்டேட்: நாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தம்

விஷால் - லிங்குசாமி இணையவிருக்கும் 'சண்டக்கோழி 2' நாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சண்டக்கோழி'. 2005ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் 2ம் பாகம் மூலமாக மீண்டும் இணைய இயக்குநர் லிங்குசாமி - விஷால் முடிவு செய்தார்கள். இடையே கருத்து வேறுபாடால் 'சண்டக்கோழி 2' பணிகள் நிறுத்தப்பட்டது.

தற்போது இயக்குநர் லிங்குசாமி - விஷால் இருவரும் பிரச்சினைகளைப் பேசி முடித்து மீண்டும் இணைய முடிவு செய்திருக்கிறார்கள்.யுவன் இசை, மதி ஒளிப்பதிவு என படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

'சண்டக்கோழி' படத்தில் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரண் இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

விரைவில் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு துவங்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x