Published : 06 Sep 2018 09:46 AM
Last Updated : 06 Sep 2018 09:46 AM

மசூம் சங்கரின் அவதாரம்

நாகேஷ் திரையரங்கம் படத்தில் திகிலூட்டும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மசூம் சங்கர், விரைவில் வெளிவரவிருக்கும் ‘90ML’  படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக அசத்தியிருக்கிறார்.

‘‘எனக்கு இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய நடிகைகளுடன் சேர்ந்து நடிக்கும்போது, சின்ன சின்ன விஷயங்களைக்கூட சமாளிப்பது கஷ்டம் என்றார்கள். ஆனால் இப்படத்துக்கு அனிதா உதீப்  இயக்குநராக அமைந்தது எனது பாக்கியம். இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஓவியா ஒரு டார்லிங். அவரைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. ரொம்ப அன்பானவர்.. அவரை பற்றி வேறென்னச் சொல்ல!

நான் டெல்லி பொண்ணு. அலகாபாத்தில் பள்ளி படிப்பு. அடுத்து டெல்லியில் அனிமேஷன் கல்வி.  நிகழ்ச்சி தொகுப்பாளினி, சீரியல்களில் உதவி இயக்குநர் என பல பரிமாணம் எனக்கு உண்டு. ஆரம்பத்தில் இங்கே எனக்கு இருந்த ஒரே பயம் மொழிதான். ஆனால் நான் விட்டுவிடவில்லை. இப்போது தமிழ் பேசுவதில் நல்ல முன்னேற்றம்!’’ என்கிறார் மசூம் சங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x