Published : 19 Sep 2018 02:25 PM
Last Updated : 19 Sep 2018 02:25 PM

வைரலாகும் சிம்புவின் புதிய கெட்டப்

சுந்தர்.சி படத்துக்காக சிம்பு வைத்துள்ள கெட்டப், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு ரிலீஸான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் பிரணிதா இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சுந்தர். சி இந்தப் படத்தை இயக்க, சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணிதா வேடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் குஷ்பூ நடிக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த 17-ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. இந்நிலையில், இந்தப் படத்துக்காக சிம்பு வைத்துள்ள கெட்டப் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்களுடன் சிம்பு நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படம், வருகிற 27-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x