Published : 08 Sep 2018 08:51 AM
Last Updated : 08 Sep 2018 08:51 AM

20 நிமிடத்தில் வெற்றி

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘சீமராஜா’ படம் அடுத்த வாரம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. முழு படப்பிடிப்பு முடிந்த நிலையில், டி.இமான் இறுதிகட்ட பின்னணி இசையமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ‘ரஜினிமுருகன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனும், சூரியும் இணைந்து வெளிப்படுத்திய காமெடி அவதாரம் இப்படத்தில் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறதாம். முழு காமெடி விஷயங்களையும் சூரி வசம் ஒப்படைத்துவிட்டு எமோஷன், ஹீரோயிஸம் ஆகியவற்றில் சிவகார்த்திகேயன் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அதிலும், 2-ம் பாதியில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் 20 நிமிட பாகுபலி ஸ்டைல் பகுதிகள் ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக முழு உழைப்பையும் செலுத்திவருகிறது படக்குழு. அந்த 20 நிமிடக் காட்சியில்தான் படத்தின் வெற்றி இருக்கிறது என்றும் கூறி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x