Published : 06 Sep 2018 09:45 AM
Last Updated : 06 Sep 2018 09:45 AM

அஜித் படத்துக்கு கடும் போட்டி

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக விநியோக உரிமை யாருக்கு என்பதுதான் தற்போதைய கோலிவுட் வட்டாரத்தின் உச்சபட்ச பரபரப்பு. இதில் ‘அறம்’, ‘குலேபகாவலி’ படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ்தான் முன்னணியில் இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தை பெரும் விலை கொடுத்து வாங்க முந்திக்கொள்ளும் ராஜேஷ், தன்னுடைய பட நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுங்கள் என்றும் அஜீத்திடம் கேட்டுள்ளாராம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x