Published : 12 Sep 2018 03:21 PM
Last Updated : 12 Sep 2018 03:21 PM

ரூ.543 கோடி பட்ஜெட், 3000 தொழில்நுட்பக் கலைஞர்கள்: கிராபிக்ஸில் அசத்தும் ‘2.0’

‘2.0’ படத்துக்காக 543 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கிராபிக்ஸ் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது.

கடந்த வருடமே வெளியாக வேண்டிய ‘2.0’, திட்டமிட்டபடி கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் இன்னும் ரிலீஸாகவில்லை. சில நிறுவனங்களிடம் கிராபிக்ஸ் பணிகள் கைமாறி, தற்போது ஒரு நிறுவனம் முடித்துக் கொடுக்கும் நிலையில் உள்ளது. எனவே, வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘2.0’ படத்தின் டீஸர் வெளியிடப்பட இருக்கிறது. அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு செலவான தொகையை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷங்கர்.

75 மில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டது. இந்தியாவிலேயே இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் இந்த அளவு செலவிடப்படவில்லை. உலக அரங்கில் இந்திய சினிமாவை எடுத்துச்சென்ற ‘பாகுபலி’யைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக கிராபிக்ஸ் பணிகளுக்காக செலவிட்டிருக்கிறார்கள்.

3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். எனவே, ‘2.0’ படம் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதோடு, மிகப்பெரிய அனுபவத்தையும் ரசிகர்களுக்குத் தர இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x