Published : 23 Jan 2014 10:00 AM
Last Updated : 23 Jan 2014 10:00 AM

மதிமுக, பாமக.வுடன் இன்று கூட்டணி பேச்சு- பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர் பாக மதிமுக மற்றும் பாமக-வுடன் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடை பெறுகிறது. தேமுதிக-வுடனான பேச்சுவார்த்தை நிறைவுபெறும் நிலையில் உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அவர் ஈரோட்டில் செய்தியாளர் களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து விவசாயிகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இந்நிலையில், வங்கிக் கடனைக் கட்டவில்லை என்று கூறி வேளாண் உபகரணங்கள் ஜப்தி செய்யப்படுகின்றன.

குடியரசு தின விழாவைக் கொச்சைப் படுத்தும் வகையில் பேசிய கெஜ்ரி வாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்த பேச்சுவார்த் தைக்கு தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும்கூட, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர, தனி ஈழம் அமைவதுதான் சரியானத் தீர்வாக இருக்கும்.

தமிழகத்தில் மதிமுக, பாமக, தேமுதிக, கொங்குநாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளுடன் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதிமுக மற்றும் பாமக-வுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சு வார்த்தை நடக்கிறது. தேமுதிக-வுடனான பேச்சுவார்த்தை நிறை வடையும் நிலையில் உள்ளது.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனைக் குறைப்பு வழங்கியதை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், காலம் தாழ்த்திய காரணத்தால் தண்டனைக் குறைப்பு என்பது குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x