Published : 13 Sep 2018 08:51 AM
Last Updated : 13 Sep 2018 08:51 AM

புதிய பரிமாணத்தில் ‘வசந்த மாளிகை’

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்து 1972-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி வெளியான திரைப்படம் ‘வசந்த மாளிகை’. டி.ராமாநாயுடு தயாரிக்க, கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார். இதில் கே.வி.மகாதேவன் இசையில் ‘மயக்கம் என்ன’, ‘கலைமகள் கைப்பொருளே’, ‘இரண்டு மனம் வேண்டும்’, ‘குடிமகனே’, ‘ஒரு கிண்ணத்தை’ என்பது உள்ளிட்ட அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தார். டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடிய இந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன.

அன்றைய காலகட்டத்தில் கலரில் வந்து வெள்ளிவிழா கொண்டாடிய ‘வசந்த மாளிகை’ படம், தற்போது இயக்குநர் வி.சி.குகநாதன் மேற்பார்வையில்  டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x