Last Updated : 02 Jun, 2019 12:29 PM

 

Published : 02 Jun 2019 12:29 PM
Last Updated : 02 Jun 2019 12:29 PM

இசை சிகிச்சை, இசை பாடத்திட்டங்கள்: இளையராஜாவின் புது திட்டம்

இசை சிகிச்சை மற்றும் இசை பாடத்திட்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்த இளையராஜா திட்டமிட்டு வருகிறார்.

இன்று (ஜூன் 2) இசையமைப்பாளர் இளையராஜா தனது 76-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். கடந்த 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு கல்லூரிகள் நடத்திய பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வந்தார்.

இன்று (ஜூன் 2) இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகிழ்ச்சியை இசை ரசிகர்கள்  பெரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் இசையை சிகிச்சைக்காகவும், பாடத் திட்டங்களாகவும் கொண்டு வரவுள்ளதாக இளையராஜா அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து இளையராஜா, “இசையை சிகிச்சைக்காக நான் பயன்படுத்தப்போகிறேன். எனது இசை சிகிச்சை மையங்கள் ஐந்து இடங்களில் துவங்கப்படும். அதற்கான ஒலிப்பதிவை நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.

இது அனைத்து வயதினருக்குமான மையம். ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட நவீன கால பிரச்சினைகளுக்கும் இங்கு சிகிச்சை வழங்கப்படும். மேலும், என் பார்வையில், பள்ளிகளில் இளம் பருவத்திலிருந்தே, உடற்பயிற்சி, விளையாட்டோடு இசையும் கற்றுத் தரப்பட வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சொல்லித்தர நான் சில பாடத்திட்டங்களை வடிவமைத்துள்ளேன். சில பள்ளிகளை அணுகி வருகிறோம். இதில் சிறக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் இன்னும் சிறக்க பயிற்சிகள் தரப்படும்.

நாங்கள் வித்தியாசமான ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளோம். பிரபலமான ஒரு சர்வதேச கல்வி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களுடன் இணைந்து பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, டிப்ளமா படிப்பு ஆகியவை தர திட்டமுள்ளது. எனது இசை என்றுமே மக்களுக்கானது. இந்த படிப்புகளை கட்டுப்படியாகும் செலவில் கொண்டுவர நான் முயற்சித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார் இளையராஜா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x