Published : 25 Jun 2019 11:59 AM
Last Updated : 25 Jun 2019 11:59 AM

அமலாபால் விலகல்: விஜய் சேதுபதிக்கு நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம்

விஜய் சேதுபதியின் புதிய படத்திலிருந்து அமலாபால் விலகியுள்ளார். அவருக்குப் பதில் மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படத்தில், ’தடையறத் தாக்க’, ’மீகாமன்’, ’தடம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார்.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த 14-ம் தேதி பழநியில் தொடங்கியது.

அங்கு விஜய் சேதுபதி - மகிழ் திருமேனி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி முடித்துள்ளனர். பின்பு, சில முக்கியக் காட்சிகளை ஊட்டியில் படமாக்கி வருகிறது படக்குழு.

இந்நிலையில், அமலாபால் தேதிகள் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலகா மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஊட்டி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தை, சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில், சர்வதேச அளவிலான பிரச்சினை பேசப்படவுள்ளது.  இதில், விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.

இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x