Published : 15 Jun 2019 09:28 AM
Last Updated : 15 Jun 2019 09:28 AM

நடிகர் சங்க தேர்தல்: வென்றால் இதையெல்லாம் செய்வோம்: பாக்யராஜ் அணியின் அடுக்கடுக்கான வாக்குறுதிகள்

நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும்வேளையில் தங்கள் அணி வென்றால் என்னென்ன செய்வோம் என அடுக்கடுக்கான வாக்குறுத்திகளை அள்ளிவீசியுள்ளது பாக்யராஜ் அணி

வாக்குறுதிகள் விபரம்:

* எந்த விதமான நிதி திரட்டலும் (கலை நிகழ்ச்சி) இல்லாமல் நமது சங்க கட்டிடம் 6 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்

* டாக்டர் எம்.ஜி.ஆர் செவாலியே சிவாஜி ரேஷன் திட்டம் - ஒவ்வொரு மாதமும் நமது சங்க மூத்த கலைஞர்களுக்கு உதவிடும் வகையில் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வழங்கப்படும்

* நமது சங்க உறுப்பினர்கள் நலனுக்காக, நமது சங்கமே குடும்ப-சேம நிதியை செலுத்தும்

* நடிகர் சங்கம் இதுவரை கடைபிடித்து வந்த டோக்கன் சிஸ்டம் ரத்து செய்யப்படும்

* நமது சங்கத்தின் மூத்த கலைஞர்கள் நலம்பெற முதியோர் இல்லத்திட்டம் சேலம், சென்னை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் உடனடியாக செயல்படுத்தப்படும்.

* நடிகர் சங்கத்தால் பிரம்மாண்டமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்

* தொழில் சார்ந்த உறுப்பினர், ஆயுள் உறுப்பினராக மாற்றம் பெறுவதற்கான கால அவகாசம் 20 வருடத்திலிருந்து 10 வருடமாக குறைக்கப்படும்

* நமது சங்க உறுப்பினர்கள் சம்பளம் பெறுவதில் உள்ள தாமதம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்துடன் கலந்து பேசி சம்பள பணத்தை அவர்களின் வங்கி கணக்கில் 15 நாட்களில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

* சங்க உறுப்பினரின் ஓய்வு ஊதியும், அவரது காலத்திற்கு பின் அவரால் நியமிக்கப்படும் கணவன் அல்லது மனைவி, இருவரில் ஒருவருக்கு வழங்கப்படும்

* சின்னத்திரை கலைஞர்கள் குறைந்த கட்டணம் (25000 மட்டும்) செலுத்தி நமது சங்கத்தில் தகுதியின் அடிப்படையில் உறுப்பினராக சேர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

* நமது சங்க உறுப்பினரின் இல்ல திருமணங்களுக்கு, நமது சங்கத்தின் ஒரு திருமண மண்டபம் இலவசமாக வழங்கப்படும்

* அனைத்து மாவட்டங்களிளும் மாதம் தோறும் நாடகங்கள் நடத்தப்படும். அதற்கான மானியத்தொகையை நமது சங்கமே ஏற்றுக் கொள்ளும்

* ஆண்டுதோறும் அமெச்சூர் நாடக விழாக்கள் நடத்தில் கலைச்செல்வம் விருது மற்றும் அதிகப்படியான தொகையுடன் பொற்கிழியும் வழங்கப்படும்

* வருடந்தோறும் நமது சங்கம் பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா நடத்தி நமது சங்க உறுப்பினர்களையும், நாடக கலைஞர்களையும் கெளரவித்து பாராட்டி சிறப்பிக்கும்.

* நமது சங்க உறுப்பினர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசவோ, விமர்ச்சிக்கவோ செய்பவர்கள் மேல், நமது சட்ட ஒழுங்கு வல்லுநர்கள் குழு நடவடிக்கை எடுக்கும்.

* பெண் கலைஞர்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக விசாகா கமிட்டி விரிவாக்கப்பட்டு சிறந்த சட்ட வல்லுநர்களின் உதவியுடன் செயல்படும்.

* எதிர்வரும் காலங்களில் ONLINE REGISTRATION முறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை வெளிப்படை தன்மையோடு நடைபெறும்.

* சங்கத்தின் அனைத்து வகையான செயல்பாடுகள், அறிக்கைகள், அறிவிப்புகள் முடிவுகள் உடனுக்குடனே குறுஞ்செய்தி வாயிலாக அனைத்து உறுப்பினர்களும் அனுப்பி வைக்கப்படும்

* நலிவடைந்த கலைஞர்களுக்கு அரசாங்கத்துடன் கலந்து பேசி நாடக கலைஞர்களுக்கான சுய உதவிக்குழுக்கள் அமைத்து செயல்பட வழிவகை செய்யப்படும்

* தற்சமயம் சங்க உறுப்பினர்கள் ஐசரி கணேசன் அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்து வரும் மாணவர்களுக்கான கல்வி உதவி மேலும் விரிவாக்கப்பட்டு சங்க உறுப்பினர் சிறப்பு கல்வி உதவி திட்டமாக செயல்படுத்தப்படும்

* நாடக நடிகர்கள் வருவாய் ஈட்டும் வகையில், அவர்கள் தலைமயிலேயே நடிப்பு பயிற்சி பள்ளி தொடங்கப்படும். மேலும், அங்கு பயின்று திரைப்பணிக்கு வரும் கலைஞர்களுக்கு சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் சலுகை வழங்கப்படும்.

* உறுப்பினர் மருத்துவ காப்பீடு திட்டம் அமுல்படுத்தப்பட்டு 2 லட்சம் அளவிலான மருத்துவ காப்பீடு வசதி செய்து தரப்படும்.

* அரசாங்கத்திடம் ஆலோசனை மற்றும் உதவி பெற்று PF/ESI வசதி பெற ஆவன செய்யப்படும்.

* பிரதம மந்திரி ராஜ் யோக்னா திட்டத்தின் கீழ் அரசாங்க உதவிப்பணம் 6000 பெற்று தர முயற்சி செய்யப்படும்

* SIAA 24 7 helpline: Hall Booking Enquiries, Membership Related Enquiries, Complaints and other Emergency Helpline. இந்த மையம் 24 மணி நேரமும் உறுப்பினர் வசதிக்காகவே செயல்படும்.

* உறுப்பினர்கள் பண்டிகை நேரங்களில் பயன்பெறும் வகையில் பண்டிகை கால அன்பளிப்பு பண்டாமகவோ/ பொருளாகவோ இல்லாமல் உறுப்பினர் நலன் கருதி GIFT VOUCHER ஆக வழங்கப்படும்.

* நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக கடந்த காலங்களில் அரும்பாடுபட்ட சங்க உறுப்பினர்களின் நினைவைப் போற்றும் வகையில், புதிய கட்டிடத்தில் இடம்பெரும்  சில பகுதிகளுக்கு முறையான ஒப்புதம் பெற்று அவர்களின் பெயர் சூட்டப்படும்.

* சமூக விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சமூக அக்கறை கொண்ட நமது சங்க கலைஞர்களின் ரசிகர், நற்பணி மன்ற உறுப்பினர்களின் உதவியுடன் ஏரி குளங்கள் தூர் வாருதல், மரம் நடுதல், தூய்மை திட்டம் போன்ற நலத்திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு சுவாமி சங்கரதாஸ் அணி வாக்குறுதி அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x