Published : 19 Sep 2014 08:24 AM
Last Updated : 19 Sep 2014 08:24 AM

தசரா, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: இன்று முதல் முன்பதிவு

தசரா மற்றும் தீபாவளி பண்டிகை களை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து சந்திரகாசி, ஹவுராவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சந்திரகாசி சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல் - சந்திர காசி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (வண்டி எண் 06010)சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 30-ம் தேதி காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.25 மணிக்கு சந்திரகாசியை (மேற்கு வங்காளம்) சென்றடையும். மறுமார்க்கத்தில் சந்திரகாசியில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி பகல் 1 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06009) மறுநாள் மாலை 5 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.

கொச்சுவேலி-கவுகாத்தி

கொச்சுவேலி - கவுகாத்தி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06336) அக்டோபர் 5, 12, 19, 27-ம் தேதிகளில் (ஞாயிற்றுக் கிழமை) பகல் 12 மணிக்கு கொச்சிவேலியிலிருந்து புறப்பட்டு திங்கள்கிழமைகளில் அதிகாலை 5.20 மணிக்கு பெரம்பூருக்கு வந்து புதன்கிழமைகளில் காலை 8.15 மணிக்கு கவுகாத்தியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கவுகாத்தி - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06335) அக்டோ பர் 8, 15, 22, 29-ம் தேதிகளில் (புதன்கிழமை)கவுகாத்தியிலிருந்து இரவு 11.25 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூருக்கு சனிக்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிக்கு வந்து இரவு 10.30 மணிக்கு கொச்சு வேலிக்குச் செல்லும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களுக் கான முன்பதிவு இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது.

பிரிமீயம் சிறப்பு ரயில்

பெங்களூர் கன்டோன்மென்ட் - திருவனந்தபுரம் பிரிமீயம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (வண்டி எண் 02657) செப்டம்பர் 26, 28, 30 மற்றும் அக்டோபர் 2-ம் தேதிகளில் இரவு 7.15 மணிக்கு பெங்களூர் கன்டோன்மென்டிலிருந்து புறப் பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருவனந்த புரம் - பெங்களூர் கன்டோன்மென்ட் பிரிமீயம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (வண்டி எண் 02658) செப்டம்பர் 27, 29, அக்டோபர் 1, 3-ம் தேதிகளில் இரவு 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு பெங்களூர் கன்டோன் மென்டை சென்றடையும்.

இந்த பிரிமீயம் சிறப்பு ரயில்கள் கோவை, பாலக்காடு, திரிசூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இதற் கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

ஹவுரா - சென்ட்ரல் பிரிமீயம் ரயில்

ஹவுரா - சென்னை சென்ட்ரல் பிரிமீயம் வாரந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 02841) செப்டம்பர் 26-ம் தேதி முதல் நவம்பர் 28-ம்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ஹவுராவில் இருந்து மதியம் 1.15 மணிக்குப் புறப்பட்டு சனிக் கிழமைகளில் மதியம் 2.25 மணிக்கு சென்டிரலை வந்தடையும்.

இதேபோல், சென்ட்ரல் - ஹவுரா பிரிமீயம் வாரந்திர ரயில் (வண்டி எண் 02842) செப்டம்பர் 27 முதல் நவம்பர் 29-ம் தேதி வரை சனிக்கிழமைகளில் சென்டிரலில் இருந்து மாலை 5.20 மணிக்குப் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.10 மணிக்கு ஹவுராவை சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவும் இன்று தொடங்கு கிறது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x