Last Updated : 28 Sep, 2014 01:15 PM

 

Published : 28 Sep 2014 01:15 PM
Last Updated : 28 Sep 2014 01:15 PM

சிபிஐ விசாரணை எதிரொலி: செபி கண்காணிப்பு அதிகாரியாக கியான் பூஷண் நியமனம்

பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைமை கண்காணிப்பு அதிகாரியாக கியான் பூஷண் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஆர்.கே. பத்மநாபனிடம் சமீபத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து தலை மை கண்காணிப்பு அதிகாரி யாக கியான் பூஷண் நியமிக்கப் பட்டுள்ளார்.

பாங்க் ஆப் ராஜஸ்தான் (பிஓஆர்) மேம்பாட்டாளர் களுக்கு எதிரான வழக்கை வலுவிழக்கச் செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பத்மநாபனிடம் விசாரணை நடத்தினர்.

2010-ம் ஆண்டு பாங்க் ஆப் ராஜஸ்தானை ஐசிஐசிஐ வங்கி வாங்கியது.

அந்த சமயத்தில் பாங்க் ஆப் ராஜஸ்தானின் பங்குகள் குறைந்த விலைக்கு விற்பனையானது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஆரம்ப கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமை நடத்தினர். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும் என்று பத்மநாபன் கூறினார்.

ஆரம்ப கட்ட விசாரணை யானது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்வதற்கு முன்பாக மேற்கொள்ளப் பட்டது.

இருப்பினும் இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எவரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை.

பாங்க் ஆப் ராஜஸ்தான் வங்கியின் நிறுவன மேம்பாட் டாளர்கள் விதிமுறைகளை மீறியிருக்கலாம் என செபி கருதியது. தயாள் குடும்ப உறுப்பினர்கள் முறைகேடான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாக செபி கருதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இக்குடும்ப உறுப்பினர்களின் பல்வேறு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக 2007 ஜூன் முதல் 2009-ம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் பாங்க் ஆப் ராஜஸ்தான் செயல் பாடு குறித்து செபி விசாரணை நடத்தியது.

இதனிடையே வெளிப்பணி அடிப்படையில் செயல் இயக்கு நராக பத்மநாபன் செப்டம்பர் 26 முதல் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவதாக அறிவித் துள்ளது. அல்லது இவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதார மற்றவை என நிரூபிக்கப்படும் வரை அவர் வெளிப்பணியில் தொடர்வார் என கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x